ஆன்றோர் சான்றோர் நிறைந்த அந்த பரந்து விரிந்த அரசவையை நோக்கி மன்னவன் வருவதை பார்த்தான் அந்த வாயிற்காவலன் மன்னவன் வரும் செய்தியை அறிவிக்க ஆரம்பித்தான்.
ஒரு பக்கம் அளவற்ற செல்வங்களை தன்னுள் வைத்திருக்கும் அலை மகளையும் மறுபக்கம் எண்ணற்ற உயிர்களுக்கு வாழ வழி செய்யும் மலை மகளையும். கலை மகள் ஆசி பெற்ற மக்களையும் கொண்டு அந்த உமா மகேஷ்வரரின் கணவனான மகேஷ்வரரின் பூரண அருளை பெற்ற வேங்கை தேசத்தின் ஈடு இணையற்ற மன்னவன் ஆருத்ர ஆதித்ய சந்திர சேகரன் வருகிறார் வருகிறார் வருகிறார்.
வாயிற்காவலன் அறிவிக்கும் சத்தம் கேட்டதும் அவையோர் அனைவரும் எழுந்து நின்றனர். எப்பொழுதும் போல வேகமாக உள்ளே நுழைந்தான் வேங்கை தேசத்தின் மன்னவன் வேங்கை போன்ற ஆருத்ரன். அவன் மார்பிலும் நெற்றியிலும் பூசி இருந்த திருநீறு சொன்னது அவன் சிறந்த சிவ பக்தன் என்பது. அவனது கூர்மையான கண்கள் சொன்னது பார்த்த உடன் யாரையும் எடை போட்டு விடுவேன் என்று. அவனது உடல் சொன்னது சோர்ந்து போய் ஒரு நாளும் உட்கார்ந்தது இல்லை என்று. அவனுடைய மீசை அவன் கம்பீரத்தினை இன்னும் அதிகமாக்கி காட்டியது. அவன் நடக்கும் தோரணையே சொல்லிவிடும் இவன் ஒரு மன்னவன் என்று. இப்படி உள்ளே நுழைந்தவனை ஒவ்வொருவரும் பார்த்துக்கொண்டு இருக்க அவன் சென்று அரியணையில் அமர்ந்தான். அனைவரையும் கண்ணால் அமரும் படி சைகை செய்தவன் என்ன வழக்கு என்று விசாரிக்க ஆரம்பித்தான்.
அமைச்சர் :மன்னா சித்திரதேசத்தில் இருந்து வந்த ஒற்றன் ஒருவன் பிடிப்பட்டான். அதே நேரத்தில் சித்திரதேசத்தில் இருந்து தூதுவன் ஒருவன் வந்துள்ளார். இப்போது என்ன செய்வது.
ஆருத்ரன் மெலிதாக புன்னகை செய்தான்
ஆருத்ரன் :இதில் கேள்வி என்ன அமைச்சரே ஒற்றனை அரசவைக்கு நடுவில் நிறுத்துங்கள். மதிப்பிற்குரிய தூதுவரை அவருக்கான ஆசனத்தில் அமர சொல்லுங்கள்.
அவன் சொல்லும்போதே தூது வந்தவருக்கு பகீர் என்று இருந்தது. அவரும் ஆசனத்தில் அமர்ந்தார். அந்த ஒற்றன் அனைவருக்கும் முன்பாக வந்து நின்றான்.
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...