❣️❣️❣️வலைகளியே மீன் சிக்கலாம்
தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நான் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை❣️❣️❣️மீனாட்சி :மகனே உறக்கம் வரவில்லையா
ஆருத்ரன் :இல்லை தாயே உறக்கம் எனக்கு வரவில்லை. தாங்கள் இன்னும் உறங்கவில்லையா
மீனாட்சி :இல்லை மகனே எப்படி உறங்க முடியும் என்னால்.ஒருவேளை அவள் உண்மையில் தமையனின் மகளாக இருந்தாலும் மருமகள் என்று மகிழ்ச்சி கொள்ள முடியாதே அவளின் மரணத்தை தானே
ஆருத்ரன் :தாயே
அவர் பேசி முடிக்கும் முன்பே தடுத்தான் ஆருத்ரன்.
மீனாட்சி :என்ன மகனே. நான் அறிவேன் உனக்கு அவளை பிடித்திருக்கிறது என்று. அதை கூட அறியாதவள் அல்லவே ஆனால் இப்படி பட்ட இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்ய போகிறாய்.ஒருவேளை நாளை அவள் என் மருமகளாக இருந்தால்
ஆருத்ரன் :இருக்க கூடாது. நாளை பற்றி இனி யோசிக்க எனக்கு விருப்பம் இல்லை தாயே. நாளை என்பது சவால் நிறைந்த நாள் தான் ஆனால் அங்கு மன்னனாக நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன். இந்த ஆருத்ரனுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன அதை அவன் என்றும் மீற மாட்டான்.
மீனாட்சி :நாளை என்ன நடந்தாலும் நீ என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுகிறேன். உன் முடிவு எதுவாக இருப்பினும் அதுவே என் முடிவுமாக இருக்கும். செல் மகனே சென்று உறங்கு மகனே
ஆருத்ரன் :என் விழிகளுக்கு ஓய்வு இன்று இல்லை தாயே தாங்கள் செல்லுங்கள் எல்லாம் நன்றாகவே நடக்கும்
மீனாட்சி அவனிடம் இருந்து விடை பெற்று வெளியே வந்தவர் தன்னுடைய அறைக்கு சென்றார். அங்கே ஆருத்ரன் ஓவியம் ஒன்று இருந்தது அதை எடுத்து கையில் வைத்தார்
மீனாட்சி :(m.v)உன்னுடைய மனதில் கோபத்தீயினை பற்ற வைத்து அதை அணையாமல் பார்த்து கொண்டு வருகிறேன். உனக்கு வாரிசு என்று ஒன்று இருக்க கூடாது என்று நினைத்தேன் அதன்படி இன்று என் மகன் சக்கரவர்த்திக்கு நாட்டின் சக்கரவர்த்தியாக மகன் பிறந்தும் விட்டான். ஆனால் நீ இன்றும் தனித்து நிற்கிறாய்.நாடு நாட்டு மக்கள் தான் முக்கியம் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறாய் ஆனால் அவர்கள் அதை உனக்கு செய்வார்கள் என்று நினைக்கிறாயா. இல்லை அனைவருக்கும் குடும்பம் வேண்டாம் நாட்டு மக்களை குடும்பமாக நினைக்கலாம் நாடும் வீடும் என்றும் ஒன்று அல்ல.அதை உணரும் காலம் நீ இவ்வுலகில் இருக்க மாட்டாய்.ஆனால் நான் ஒன்றை மட்டும் காண ஆவலாக உள்ளேன் நான் தான் உன் மரணத்திற்கு காரணம் என்று அறிந்த பிறகு உடலால் நீ அடையும் வேதனை காட்டிலும் அதிக வேதனை அடைவாய் அதை என் கண்களால் நான் காண வேண்டும். நீ உன் வாழ்க்கையின் அனைத்து நம்பிக்கையும் இழந்து நாட்டை இழந்து ஏன் வாழ வேண்டும் என்று யோசிக்கும் ஒரு கணம் எனக்கு போதும் இத்தனை வருடம் உன்னை கொல்லாமல் போன வேதனையும் அரியணையில் நீ அமர்ந்து ஆட்சி செய்வதை பார்த்து கோவம் கொண்டு எரிமலையான என்னுடைய மனதின் வேதனையை மறைத்து சிரித்த அத்தனை வேதனையும் பறந்து போகும். அன்பு மகனே விரைவில் இறக்க என்னுடைய வாழ்த்துக்கள். முதலில் உன் மனதில் இடம் பிடித்த பாவத்திற்காக அவளுக்கு உன் மூலமாகவே மரண தண்டனை பெற்று தர போகிறேன். மரணம் அவளுக்கு வேதனை உனக்கு மகிழ்ச்சி எனக்கு (me:இப்படி நடந்தா திட்டு எனக்கு 🤭.பாப்போம் என்ன ஆகும்னு )
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...