❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தோழனின் தோள்களும்
அன்னை மடி அவன் தூரத்தில்
பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள
படி என்றும் நட்புதான் உயர்ந்தது
பத்து படி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இங்கே மக்கள் கூட்டம் கூடிவிட்டது சேதுபதியும் மூக்கையனும் மல்லுக்கு தயாராகி விட்டார்கள். சேதுபதி அவனுக்குள் இருந்த கோபத்தை யார் மீது காட்டலாம் என்றுதான் இருந்தான் அப்போதுதான் மூக்கையன் தானாக பிரச்சனை செய்து இப்படி சண்டைக்கு வழி செய்து விட்டான்.உண்மையை சொல்ல வேண்டும் என்றால் மூக்கையன் சிறந்த மலயுத்த
வீரன்தான் அவனை தோற்கடிப்பது
என்பது அவ்வளவு எளிதும் அல்ல. எதிரியை அவன் களத்தில் சந்தித்து வெல்வது தானே வீரனுக்கு அழகு அதனால்தான் சேதுபதி அவனுடன் மல்யுத்தம் புரிய சம்மதம் செய்தான். இங்கே மூக்கையனுக்கு சேது மீது கோபம் தன்னுடைய தங்கையை சேது திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அதே நேரம் சேது உச்சக்கட்ட வேதனையில் இருந்தான். அதிகபட்ச கோபம் இல்லை வேதனை வரும்போது எதாவது ஒரு பொருளை தூக்கி போட்டு உடைத்தால் மனம் கொஞ்சம் அமைதியாகும் அல்லவா அது போலதான் இப்போது யாரேனும் ஒருவர் இன்னொருவரின் எலும்பை உடைத்தால் தான் அவர்கள் மனம் அமைதியாகும் அப்படி ஒரு நிலையில் இருந்தார்கள் இருவரும். இங்கே வம்புக்கு சேது இழுக்கவில்லை மூக்கையன்தான் சேதுவை வம்புக்கு இழுத்தது.அதோடு மூக்கையனுக்கு இருப்பது கோபம் சேதுக்கு இருப்பது வேதனை மற்றும் கோபம் யார் யாரை வெல்வார்கள் என்று இதோ சண்டை தொடங்குகிறது இப்போதே பார்ப்போம்.இருவரும் களதுக்கு வந்து விட்டார்கள் தோள்கள் பிடித்து சண்டை போட ஆரம்பித்தார்கள். மூக்கையன் சேதுபதியை ஆரம்பத்தில் கொஞ்சம் ஆரோசமாகதான் தாக்கினான்.சேது அவன் தாக்குதலை சமாளிதான் அவ்வப்போது சேது திரும்பி அடிக்கவும் செய்தான். பார்ப்பவர்களுக்கு சேது எதிர்த்து அவ்வளவாக அடிக்காதது போல்தான் இருந்தது ஆனால் சேது கொடுத்த ஒவ்வொரு அடியின் வேதனையும் மூக்கையன் ஒருவனுக்கு மட்டும்தான் தெரியும். ஒரு கட்டத்தில் மூக்கையன் சேதுவை மண்ணில் கீழே தள்ளி விட்டான் சேதுவின் மீது ஏறி அமர்ந்து அவனை அடிக்கலாம் என்று கற்பனை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக எல்லாரையும் தன்னுடைய வீரத்தை பாருங்கள் என்பது போல் பார்த்து விட்டு சேதுவின் மீது பாய போக சேது காலை வைத்து மூக்கையன் கழுத்தில் ஒரு மிதி மிதித்தான் . அடி வாங்கிய இடம் கழுத்து என்பதால் ஒரு நிமிடம் தடுமாறினான் மூக்கையன் அவனுக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை அந்த வாய்ப்பை பயப்படுத்தி கொண்ட சேது அவன் பிடித்து இழுத்து கீழே தள்ளினான் மூக்கையனுக்கு ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை ஆனால் அதற்குள் சேதுவின் கைகள் தொடர்ந்து இடி போல் அவன் முகத்தில் இறங்கின வாசுகியை பற்றி பேசிய வாயில் இருந்து இப்போது ரத்தம் வந்து கொண்டு இருந்தது மூக்கையனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சேதுக்கு நன்றாக தெரியும் மூக்கையனுக்கு என்று குடும்பம் உள்ளது என்று அதனால்தான் கை கால்களை உடைக்காமல் எப்போதும் அடுத்தவர் பற்றி புறம் பேசும் அவன் வாயை உடைத்தான்.ஊர் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து சேதுவை அவனிடம் இருந்து பிரித்து விட்டார்கள் மூக்கையனின் இரண்டு பற்கள் பறிபோனது அவனை அடித்து சேதுவின் கைகளிலும் ரத்தம் வந்தது. சேதுக்கு இருந்த கோபம் வேதனை கொஞ்சம் கூட அடங்கவில்லை.அவனுக்கு இந்த உலகில் ஒரு புழு இருப்பதால் உள்ள நன்மை கூட இந்த மூக்கையன் போன்ற ஆட்கள் இருப்பதில் இல்லை என்று தோன்றியது.
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...