வாசுகி :நா நான் என்னோட பேர் சிறுவாசுகி
புதியவன் :எங்கிருந்து வருகிறாய்
வாசுகி :நான் நான் கடல் கடந்து உள்ள சென்னை என்னும் தீவை சேர்த்தவள்.அங்கிருந்து வருகிறேன்(me:நீ அடிச்சு விடு யாரு கேப்பா )
புதியவன் :அப்படி ஒரு தீவை நான் கேள்வி பட்டது இல்லையே
வாசுகி :கேள்வி பட்டிருக்க வாய்ப்புகள் குறைவு ஏனென்றால் அந்த தீவு இப்போது இல்லை. அந்த தீவு கடலில் மூழ்கி அழிந்து விட்டது.
புதியவன் :பின்பு நீ எங்கனம் இங்கு வந்தாய்
வாசுகி (m.v):கேள்வி கேக்கவே பொறந்தியா டா நீ. கேள்வி கேக்குறது ஈஸி பதில் சொல்றது தான் கஷ்டம்.
புதியவன் :உண்மையை சொல்ல யோசனைகள் தேவை இல்லை பெண்ணே
வாசுகி :பொய் கூறும் அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து படகில் ஏறி தப்பிக்க நினைத்தோம். ஆனால் பாதி வழியில் கடல் சீற்றம் ஏற்பட்டு படகு கவிழ்ந்தது. அதன் காரணமாக நான் என் சொந்தம் அனைத்தையும் இழந்தேன். கண் விழித்து பார்த்த போது நான் மட்டும் கடற்கரையில் மயங்கிய நிலையில் இருந்தேன் அங்கிருந்து ஒரு மூதாட்டிதான் எனக்கு உதவினார். மன்னரிடம் சென்றால் உதவி கிடைக்கும் என்று கூறினார். நான் அரண்மனை நோக்கி செல்லும் போது பொழுது சாய தொடங்கிய காரணத்தால் சத்திரம் எதாவது இருக்குமா என்று தேடினேன். அப்போது யாரோ பின் தொடரவது போல இருக்கவே உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டேன் களைப்பின் காரணமாக மயங்கி விட்டேன். இது தான் நடந்தது.
வாசுகி (m.v):என்ன நம்புனானா இல்லையா ஐயோ இந்த டெரர் மூஞ்சில என்ன ரியாக்சன் இருக்குன்னு கண்டு பிடிக்கவே இல்லை.
புதியவன் :அப்போது உன்னுடைய நாடு இப்போது இல்லையா உன்னுடைய குடும்பத்தினர் யாரும் இவ்வுலகில் இல்லையா.
இப்போது வாசுகி கடுப்பு ஆனாள்.
வாசுகி :கடவுள் மீது ஆணையாக என் குடும்பம் என்ன பெற்றவர்கள் யாரும் இவ்வுலகில் இப்போது இல்லை . நான் பிறந்து வளந்த நாடும் அடையாளம் இல்லாததாக உள்ளது. ஆமா நான் ஏன் இதெல்லாம் உங்க கிட்ட சொல்ற. எனக்கு ஒருவேளை கூழ் கொடுத்தீங்க அதுக்கு நன்றி. நான் இப்போதே உங்கள் வீட்டை போற. இதற்கு மேலும் கேள்வி கேட்டு என்னுடைய வேதனையை அதிக படுத்தாதிங்க.
ŞİMDİ OKUDUĞUN
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantastikஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...