❤❤❤ஓ நிழல் போல
விடாமல் உன்னை
தொடர்வேனடி புகைப்போல
படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி❤❤❤வாசுகி மீனாட்சியின் அறைக்கு சென்றுகொண்டு இருந்தாள்.
வாசுகி (m. v) :இவருக்கு மனசுல தான் பெரிய ராஜான்னு நினைப்பு போல. சரி ராஜாதான் இருந்துட்டு போட்டும். அதுக்கு என்ன பண்ண முடியும் என்ன இப்படி அடிமை மாதிரி அதுவும் இந்த தாய் கிழவி கிட்ட கோர்த்து விட்டுட்டு அப்டியே நல்லவர் மாதிரி சாப்பிடுற இடத்துல வந்து சிரிக்கிறாரு.யாருக்கு வேணும் அவரோட சிரிப்பு அவர் சிரிச்சா வேலை பாதி ஆயிடுமா இல்ல எனக்கு இருக்குற பிரச்சனைதான் தீர்ந்துருமா.நான் வாசுகி அவ்ளோ சீக்கிரம் சமாதானம் ஆக மாட்டேன்.
என்று மனதில் நினைத்து கொண்டு இருந்தவள் மீனாட்சியின் அறைக்கு சென்றாள்.மீனாட்சி மெத்தையில் அமர்ந்து இருந்தார். அவளை பார்த்ததும் ஏளன புன்னகை ஒன்றை சிந்தியவர் அவளை வர சொன்னார்.
மீனாட்சி :உணவு அருந்தினாயா பணியாளர்களுக்கு என்று சமைக்கப்படும் உணவு ஆயிற்றே அது. அதன் சுவை எப்படி இருந்தது.
வாசுகி :நன்றாக உழைத்து களைத்து வரும் பசியின்போது உண்ணும் உணவு எதாயினும் அமிர்தம் தான். உணவு அருமை. உங்கள் உணவு ருசித்ததா.
மீனாட்சிக்கு அவள் கூறும் வார்த்தையின் அர்த்தம் புரிந்தது.
மீனாட்சி :நான் தான் உன்னை கேள்விகள் கேட்பேன் நீ அதற்கு பதில் உரைத்தால் போதும் புரிகிறதா உனக்கு
வாசுகி தலையை மட்டும் ஆட்டினாள்.
மீனாட்சி :வா வந்து என்னுடைய பாதங்களை பிடித்து விடு.
இதோ வருகிறேன் என்றவள் தரையில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு தெரியும் மெத்தையில் அமர்ந்தால் எப்படியும் மீனாட்சி தேவை இல்லாமல் திட்டுவார் என்று.அவர்களின் பாதங்களை பிடித்து விட ஆரம்பித்தாள்.
மீனாட்சி :நீ என்ன புண்ணியம் எல்லாம் செய்தாயோ இங்கு என் அறையில் என் அருகில் அமர்ந்து என் பாதங்களை பிடித்து விடுகிறாய். நீ கவலை கொள்ளாதே உன்னை நான் ஆருத்ரனிடம் கூறி எனக்கு உன்னை நிரந்தரமாக சேவை செய்ய வைக்கிறேன்.
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...