பகுதி - 27

329 55 22
                                    

இதை சொல்லி முடித்தவள்
மேலும் தொடராமல் அமைதியாகவே

திரும்பி பார்த்த அனு மீராவின் வருகையை அறிந்து கொண்டாள்.

அவளை நோக்கி "வா மீரா நீயும் உட்காரு நாம சும்மா தான் பேசிட்டு இருந்தோம்" என்றாள் அனு மிகவும் கனிவாக

"நான் ஒன்னும் உங்க கூட உட்கார்ந்து கதை பேச வரல சாப்பிட கூப்டாங்க அதை சொல்ல தான் வந்தேன்" என்றாள் முகத்தில் அடித்தவாறு

இதைக் கேட்டு விட்டு சுக்கு நூறாக உடைந்த சத்யா முகத்தை அனு பார்த்து விட்டாள்

அதனாலேயே சற்று கவலை தோய்ந்த குரலில் "சரி மீரா நீ போ நாங்க வரோம்" என்றாள்.

எதுவும் பேசாமல் இறுகிய முகத்தோடே நகர்ந்து விட்டாள் மீரா

அவள் சென்றதும் சத்யாவை தயக்கத்தோடு நோக்கிய அனு "ஸாரி" என்றாள்.

பதிலுக்கு அவளோ "ஏய் லூசு நி எதுக்கு டி ஸாரி சொல்ர..வா போகலாம்" என எழுந்து கொண்டாள்.

ஆனாலும் சத்யாவின் முகம் அவள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை உணர்த்தியதை புரிந்து கொண்ட அனு வாடிய முகத்தோடே எழுந்து அவளோடு சேர்ந்து போகலானாள்.

ஏற்கெனவே மீரா கோபத்தோடு இருந்ததால் அனுவிற்கு அவளை எதிர்த்து பேசக் கூட முடியவில்லை.

உணவு உண்பதற்காக போய் அனைவரும் அமர்ந்து கொள்ளவே
சத்யாவிற்கு வலது புறமாக அமர்ந்து கொண்டாள் அனு.

இடது புறமாக ஆசனம் இருந்தாலும் ஒரு கதிரை தள்ளியே அமர்ந்தாள் மீரா
இதுவும் சத்யாவை வெகுவாகக் காயப்படுத்தியது.

இவர்கள் அமர்ந்திருகஓரளவு வயதான தோற்றத்தில் இருந்த ஒரு பெண் வந்து உணவு பரிமாறலானார்.

அவரை சற்று நேரம் நோக்கிய சத்யா
பின்னர் அனுவின் பக்கம் திரும்பி
"அனு இது யாரு?" என்றாள்.

இது அந்த பெண்ணிற்கும் கேட்க கூடியதாகத் தான் இருந்தது.

பதிலுக்கு சிரித்தவாறே "அம்மா இல்லை ஆனா அம்மா மாதிரி " என்றார் அவரே

காதலென்பது...Where stories live. Discover now