அடுத்த நாள் காலை
"மணி எட்டைத் தாண்டிருச்சி பாரு...உன் பொண்டாட்டி எப்படி தூங்கிட்டு இருக்கா...கொஞ்சமாவது எழுப்பனும்னு தோணுதா உனக்கு" என வெளியில் தனது அத்தை அதாவது அவளது பாஷையில் சொல்வதானால் அவளது ஆன்டி
ஆசிர்வதிப்பது பெட்ஷீட்டுக்குள் இருந்தவளது காதுகளை அடைந்தாலும்"வழமையா நடக்குறது தானே" என அமைதியாய் மறுபக்கம் திரும்பி தூங்கினாள் பானு.
"அம்மா...எதுக்குமா இப்போ கத்திட்டு இருக்க...உனக்கு என்ன வேலை பண்ணனும்னு சொல்லு நான் பண்ரேன்" என எப்பொழுதும் போல பானுவிற்கு சப்போர்ட் பண்ணினான் ஹரிஷ்.
இதுவும் அவளது காதுகளில் விழத்தான் செய்தது இதைக் கேட்டு சிரித்தவாறு இருக்க
"ஆமாம் வாசல் தெளிச்சு கோலம் போடனும்" உன்னால முடியுமா
"ஒழுங்கா போய் அவளை இப்போ எழுப்பு" என கட்டளையிட்டார் பானுவின் மாமியார்."பானு..." என்றவாறே ஹரிஷ் அறையினுள் நுழைய
தூங்குவது போல நடித்துக் கொண்டு இருந்தாள் பானு.
அவளருகே வந்தவன் "உன்னால நான் டெய்லியும் அம்மாக்கிட்ட திட்டு வாங்குறேன்...இப்போ எழ போறியா இல்லையா" என பெட்ஷீட்டை இழுத்து எடுத்தான்.
உள்ளுக்குள் இருந்தவள் அவனைப் பார்த்து முறைத்தபடி "உங்க அம்மாக்கு தான் அறிவில்லை...உனக்குமா இல்லை...தூங்குற மனுஷனா இப்படி தான் எழுப்புறதா" என்றாள்.
"அம்மா...பானுமதி தயவு செய்து எழுந்துக்கிறியா...இது ஓகேவா"
"போடா...உனக்கு எப்படி எழுப்புறதுனு கூட தெரியல"
"ஆமாம்...அப்போலாம் ஸார்...ஸார் னு எவ்வளவு மரியாதையா கூப்டுவ...இப்ப உனக்கு டா வா...சரி முதல்ல எழுந்துக்கோ" என கையை நீட்டினான்.
"முடியாது..."
"என்ன பண்ணனும் சொல்லு...டெய்லி காலைல டாஸ்க் வச்சிருப்பியே...இன்றைக்கு என்ன?"
"என்னை வாஷ்ரூம் வரை தூக்கிட்டு போ"
"சரி வா..." என சொல்ல
ČTEŠ
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...