அருவியாய் அவிழ்ந்த மொழி..
ஆழமாய் மலர்ந்த காதல்..
அகந்தையில் அகன்ற விழிகள்..
ஆழ்கடலை விழுங்கும் அழகு..
அது கண்கள் வணங்கிடும் பேரழகு..கதிரவன் தன் இதழ்களை சுருட்டி போர்த்திக்கொள்ள பூமிப்பந்து கருமையின் ஆட்சியிற்கு கீழே வந்த நேரம் அது.
ஆனால் அன்று மேலதிகமாக ஒளிர விட்டிருந்த ஒளிவிளக்குகளால் காரிருளில் வெள்ளிக் கீறல் போல் ஜொலித்தது அந்த வீடு.
நம் நாயகனின் பிறந்தநாள் என்பதால் அந்த வீட்டை நோக்கி இன்னும் கொஞ்சம் இன்பம் மலரை நோக்கி வரும் வண்டைப் போல் வந்து ஒட்டிக் கொண்டது எனலாம்.
அந்த நாளின் அழகின் எல்லையை வர்ணிக்க அளவுகோலில்லை என்பது தான் உண்மை.
அதிரன் வெகு நேரமாக காத்துக் கொண்டு இருந்ததன் பகரமாக ஒரு வழியாக தர்ஷனும் சந்துருவும் அந்த வீட்டை வந்தடைந்தனர்.
வந்ததும் வராததுமாக வாசலில் நின்றபடியே "டேய் மச்சான்..என்னடா இன்றைக்கு பார்க்க ரொம்ப சூப்பரா இருக்க.." என்றபடியே அதிரனை சந்துரு கட்டியணைக்க
அவர்களைப் பார்த்த சந்தோசத்தில் இதழ் பிரியாமல் சிரித்தவன் "சும்மா..கலாய்க்காதடா.." என சமாளித்தான்.
அவன் அருகில் நின்றிருந்த தர்ஷன்"அவன் சொல்ரது நிஜம் தான் டா... இன்றைக்கு தான் டா உன் முகத்துல..அந்த பழைய சிரிப்பு மொத்தமா இருக்கு..உனக்கு அப்படி என்ன தான் சந்தோசம்னு தெரியலையே கண்டுபிடிக்கிறேன்" என ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி அதியை நோக்க
அப்படியே அவன் வயிற்றில் ஒரு குத்துவிட்டபடி "ஆமா..நான் சந்தோசமா இருந்தா உனக்கு பொறுக்காதே.." என்ற அதிரனை பதிலுக்கு "அப்டிலாம்..இல்லைடா..இருந்தாலும் அப்படி தான்" என்றபடியே கட்டிப்பிடித்துக் கொண்டான் தர்ஷனும்.
இவர்கள் வந்ததும் அடுத்த நிகழ்வாக கொண்டாட்டம் ஆரம்பமாகியது.
முதலில் கேக் கட் பண்ணுவதற்காக அனைவரும் சுற்றி நின்று கொண்டனர்.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...