பகுதி - 22

349 60 31
                                    

அடுத்த நாள் யாருமே எதிர்பாராத விதமாக
காலேஜிற்கு போக கிளம்பி விட்டாள் சத்யா.

அவள் ஏன் வந்தாள் ? எதற்காக மீண்டும் எந்த வித முன்னேற்பாடுமே இல்லாமல் செல்கிறாள்? என வீட்டில் யாரிற்குமே தெரியவில்லை.

அவள் செல்வதற்கு முன்னர் அதிரனை ஒரு தடவை பார்த்து விட்டு செல்லலாம் என அவனது அறையை நோக்கி சென்றாள்.

அவனோ தலைவரை பெட்ஷீட்டால் போர்த்திக் கொண்டு உறங்கியிருந்தான்.

பெட்ஷீட்டை விலத்தி அவனைப் பார்த்து விட்டு இலேசாக தோன்றிய புன்னகையோடு அவனை மீண்டும் போர்த்தி விட்டவள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

அவள் சென்றது வீட்டில் யாருக்குமே தெரியவில்லை.

எல்லோரும் உறங்கிக் கொண்டு இருந்த நேரம் அது.

எந்த வித சத்தமுமே காட்டாமல் மெதுவாக கதவைத் திறந்து கொண்டு யார் கண்ணிலும் படாமல் வெளியேறியவள்
அந்த காரிருளில் நடை போட்டது புகையிரத நிலையத்திற்கு தான்.

அங்கே யாருமே இருக்கவில்லை என்பதற்கு சான்றாக பேரமைதி நிலவியது.
இவள் காலடி சத்தம் அவளுக்கே கேட்கும் படி இருந்த நிலையில் கடும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள் அவள்.

புகையிரத நிலையத்தை அடைந்தவளது கண்களின் அலைவு அவள் யாரையோ தேடுவதைப் புலப்படுத்தியது.

அங்கே ஒரு ஓரமாக மூடியிருந்த தேனீர்க் கடைக்கு அருகே நாலைந்து பேர் நின்றிருந்தனர்.

அத்தனை பேரும் ஆண்கள் தான் அதற்கும் மேலாக அந்த காரிருளில் அவர்களது முகம் புலப்படாத அளவு கறுமையாக இருந்தது அவர்கள் தோற்றம்.

அதற்கும் மேலாக இவர்களது பார்வை சத்யாவை விட்டும் அகல மறுத்தது.

எதேச்சையாக அவர்களை நோக்கிய சத்யாவிற்கும் அந்த கும்பலைப் பார்த்ததும் இதயம் கடும் வேகமாக துடிக்கத் தொடங்கியது.

இருந்தாலும் அவர்களைக் கண்டு கொள்ளாமல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

காதலென்பது...Dove le storie prendono vita. Scoprilo ora