சத்யாவின் தொலை பேசி அழைத்த ஓசைக்கு பதிலாக அதை எடுத்து காதில் வைத்தவள்
"சொல்லு பானு" என்றாள்.
"என்ன சொல்லனும்...லூசு என்ன டி பண்ணிவச்சிருக்க நீ..உனக்கு எத்தனை தடவை சொல்லிருப்பேன் வேணாம் வேணாம்னு..சொல்ரத கேட்குறியா நீ..எனக்கு நடந்தது எதுவுமே தெரியல இப்போ தான் அதிரன் போன் பண்ணி சொன்னான்"
"என்ன டி சொல்ர அதி உங்கிட்ட பேசுனானா?" என்றாள் வியந்தவாறே
"இது மட்டும் தான் உன் காதுல விழுந்ததா..."
"ஐயோ அது இல்லை டி அவன் என் மேல ரொம்ப கோபமா இருக்கானா.."
"ஆமா நீ பண்ணி வச்சிருக்க வேலைக்கு உன்னை பாராட்டுவாங்களா..
ஏன் சத்யா இப்படி பண்ண?""அது ரொம்ப பெரிய கதை பானு..."
"என்ன பெரிய கதை நான் உனக்கு ஆரம்பத்துல இருந்தே என்ன சொன்னேன்..அந்த பையன் நல்லவன் கிடையாது..தயவு செய்து ஏமாறாதனு..ஆனா நீ போயும் போயும் அவனை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்க"
"நீ யாரை நல்லவன் இல்லைனு சொல்ர பானு?"
"வேற யாரு அந்த பொருக்கி சன்ஜய் தான்.."
"பானு உனக்கு அவனை பற்றி என்ன தெரியும்..பொருக்கினு சொல்ரியே அவனோட அப்படி என்ன பொருக்கித்தனத்தை பார்த்துட்ட நீ.."
"ஆமா நீ திருந்தவே மாட்ட சத்யா..உன்னோட இந்த பிடிவாதத்தால தானே ஆன்டி இறந்தே போயிட்டாங்க"
"என்ன பானு என்னை பற்றி எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பேசுற.."
"வேற என்ன சத்யா...
உனக்கு தெரியாதா? நீ இப்படி பண்ணா ஆன்டி தாங்க மாட்டங்கனு அப்படி இருந்தும் நீ இப்படி பண்ணிருக்கன்னா நீ எப்படி உங்க அப்பா அம்மாக்கு நல்ல பொண்ணா இருக்க முடியும்""பானு என்னோட நிலவரம் தெரியாம நீ பேசிட்டு இருக்க....நீ முதல்ல நேர்ல வா உனக்கு எல்லாவற்றையும் நான் தெளிவா சொல்ரேன்"
என்று விட்டு அழைப்பைத் துண்டித்தாள் சத்யா.
இவற்றை கேட்டுக் கொண்டு இருந்த அனு "என்னக்கா.. யாரு போன்ல" என கேட்க
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...