இவர்கள் வீட்டுக்கு போய் பார்க்க அங்கே ஏற்கேனவே சுஜாதா கோயிலிலிருந்து வீடு திரும்பியிருந்தார்.
இதைப் பார்த்ததும் இருவருக்கும் பேச்சு மூச்சற்றுப் போனது.
மெதுவாக நடை போட்டு வாசலில் போய் நிற்கவே
எதுவும் பேசாமல் இருந்தார் சுஜா.இவர்களும் சரி என உள்ளே நுழைய திடீரென கத்தி சண்டையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து இந்த தடவை பக்கத்து வீட்டுக்கு போனதற்காக அனுவின் காலில் சூடு போடப்பட்டது.
வழமை போலவே மீராவிற்கு எதுவும் செய்யாமல் அப்படியே விட்டு விட்டார்.இதற்கு காரணம் தான் மீராவீற்கும் தெரியவில்லை அனுவிற்கும் தெரியவில்லை..
இதை மீண்டும் தேவியிடம் சொல்லப் போனால் மேலும் பிரச்சினை அதிகமாகும் என எண்ணி பயந்து இருவரும் இதை அவர்களிடம் சொல்ல எத்தனிக்கவில்லை.
அடுத்த நாள் பாடசாலையில் அனுவும் மீராவும் தங்கள் பாட்டில் தம் நண்பர்களோடு கலந்துரையாடிக் கொண்டு இருக்கையில்
குறுக்கிட்ட சுபா "ஹேய் உங்க ரெண்டு பேர் கூடயும் கொஞ்சம் பேசனும் வாங்களேன்" என அழைத்தாள்.இவர்ளும் சரி "இதோ வரோம்" என எழுந்து போக
"நம்ம அதிரனுக்கு நாளைக்கு பர்த்டே அது தெரியுமா உங்களுக்கு?" என்றாள் சுபா.
இருவரும் ஆச்சரியத்தோடு நோக்கியபடியே "அப்படியா எங்களுக்கு தெரியாதே.." என்றனர்.
"சரி அதான் இப்போ சொல்லிட்டேன்ல..அதுக்கு அவனுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கனும்..
அதுக்காக எங்க வீட்ல ஒரு பார்ட்டி அரேன்ஜ் பண்ணி இருக்கேன்..அதுக்கு உங்க ரெண்டு பேரையும் வர சொல்ல தான் கூப்டேன்..வருவீங்கள்ல" என சுபா சொன்னதுமேசட்டென தோன்றி மறைந்ந சுஜாதாவின் முகத்தோடு அனுவும் மீராவும் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டனர்.
"என்ன சொல்லுங்க,.?" என சுபா மீண்டும் அழுத்தி கேட்கவும்
கவலை தோய்ந்த முகத்தோடு"வர முயற்சி பண்ரோம்.." என்றாள் மீரா.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...