சிறிதளவு நேரம் அங்கு இருந்து விட்டு அவர்கள் மூவரும் கிளம்பிப் போயினர்.
அடுத்த நாள் காலை அன்று காலேஜ் இருக்கவில்லை என்பதால் சத்யா , பானு இருவரும் இணைந்தே சமையல் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.
திடீரென்று காலிங் பெல் அடிக்கும் ஓசை...
வெளியில் போன சன்ஜய் தான் வந்திருப்பான் என எண்ணி கதவைத் திறக்க விரைந்தாள் சத்யா.
சன்ஜய் வீட்டில் இல்லையென்றால் பயத்திற்கு வீட்டில் உள்ள அத்தனை கதவுகளையும் லாக் செய்து வைத்து விடுவாள் சத்யா.
இவள் போய் திறந்து பார்க்க எதிரில் நின்றிருந்தது சன்ஜய் அல்ல...
மாறாக அவளது அப்பா
அவள் இதை சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை .
அவரைப் பார்த்ததும் கண்கள் குளமாக வாயில் "அப்பா" என மொழிந்தவாறே நின்றிருந்தவள்
"உள்ள வாங்கப்பா" என்றாள்.
உள்ளே வந்து அமர்ந்து கொண்டவர் "எப்படிம்மா இருக்க?" என கேட்க
வெறுமனே தலையை மட்டும் அசைத்து நன்றாக இருப்பதாக சொன்னாள்.
அதனைத் தொடர்ந்து "என்னப்பா திடீருனு வந்திருக்கீங்க?" என சத்யா வினவ
"ஆமாம் என் பொண்ணை பார்க்கனும்னு தோணுச்சு அதனால வந்தேன்" என்றார் சாதாரணமாக
"அப்போ என் மேல கோபம்..." என்பதை சத்யா முடிக்கும் முன்னரே
"உங்க அம்மாவுக்கு ட்ரீட்மண்ட் பண்ண டாக்டரைப் போய் பார்த்தேன்..." என அவர் ஆரம்பித்தார்.
இதற்கிடையில் அங்கு வந்த பானுவும் அவர் வருகையைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்க
இருவருக்கும் சேர்த்தே கதையை சொல்ல ஆரம்பித்தார் அவர்.
"தேவிக்கு ஏற்கெனவே ஹார்ட் வீக் ஆக இருப்பதா டாக்டர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே சொல்லி இருந்தாராம் ஆனால் அவ தான் எங்க யாருக்கிட்டயுமே சொல்லாம மறச்சிட்டா..எங்கிட்ட முன்னாடியெல்லாம் கதைக்கும் போது சொல்லிருக்கா..நம்ம பசங்க இப்படி யாரயாவது பிடிச்சிருக்குனு வந்து சொன்னா எதிர்க்க கூடாது..ஏன் என்றால் இது அவங்களோட வாழ்க்கை வாழப்போறது அவங்க தானே அவங்க சந்தோசம் தான் நமக்கு முக்கியம்னு...அப்படி சொன்னவ ஏன் இந்த விடயத்துல இவ்வளவு பதற்றப்பட்டா னு நான் யோசிச்சிட்டு தான் இருந்தேன் இப்போ டாக்டர் சொன்னதால தான் புரிஞ்சது அவ ஹார்ட் ஆல்ரெடி வீக் ஆக இருந்ததால தான் இப்படி இறந்து போயிட்டானு...அதுக்கு நீயும் காரணம் தான் சத்யா ஆனா நீ மட்டும் தான் காரணம் இல்லை...அவ எங்ககிட்ட முன்னாடி இந்த விடயம் பற்றி சொல்லிருந்தா கவனமா இருந்திருக்கலாம்..."
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...