பகுதி - 7

559 85 47
                                    

சிறிது நேரத்தில் பெல் அடிக்கவே ஸ்கூல் ஸ்டார்ட் ஆகி முதலாவது பீரியடுக்கான நேரமும் வந்தது.

அதிரனோ எப்படியோ தட்டுத்தடுமாறி கடைசி நேரத்தில் பயிற்சியை செய்து முடித்து இருந்ததால் சற்றே அமைதியாக அமர்ந்திருந்தான்.

தர்ஷனோ "ஐயோ இன்னைக்கு ஸார் வந்திருக்க கூடாது..வந்திருந்தாலும் க்ளாசுக்கு வரக் கூடாது" என அப்போது தான் தெய்வ பக்தி நியாபகம் வந்தவனாக வேண்டிக் கொண்டு இருந்தான்.

சந்துரு எப்பவும் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பதால் அவன் சாதாரணமாக அமர்ந்தபடி தர்ஷன் செய்யும் செயல்களை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான்.

சிறிது நேரத்தில் அந்த பாடத்திற்குரிய சார் வந்து "குட் மார்னிங் ஸ்டூடன்ட்ஸ்" என்றடியே உள்ளே நுழையவும் "மச்சான்..வந்துட்டாருடா..!!" என அதிர்ந்தபடியே சந்துருவை நோக்கினான் தர்ஷ்.

ஆக அவன் வேண்டுதல் ஆற்றில் கரைத்த புளி போல ஆகிப்போனது.

வந்ததும் வராததுமாக "எங்க ஸ்டூடன்ட்ஸ் நான் தந்த ஹோம் வர்க்க செஞ்சிட்டீங்களா..செய்யாதவங்க யாராவது இருந்தா எழுந்திருங்க" என சொல்லவும்

சந்துருவும் தர்ஷனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"மச்சான் லீவு தந்ததுனால மறந்திருப்பாருனு நினச்சா..அவர் மறக்கலடா நாம தான் மறந்துட்டோம்" என்றான் தர்ஷ் அப்பாவியாக முகத்தை வைத்தபடியே..

"விடு தர்ஷா எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகிக்கிட்டு" என்ற சந்துரு

"வா எழுந்து நிக்கலாம்" என சொல்லவே

இருவரும் எழுந்து நின்று கொண்டு வேறு யாரு நிற்கிறார்கள் என முழு வகுப்பறையையும் ஒரு பார்வை பார்க்க நிற்பவர்கள் இவர்களிருவருமாக மட்டும் தான் இருந்தது.

சந்துருவின் காதருகே சென்றவன் "மச்சான் நாம ரெண்டு பேரும் மட்டும் தான்டா" என சொல்ல

அவன் சொல்வதைக் கேட்காமல் பதிலுக்கு "கொஞ்சம் திரும்பி பாருடா.." என்றான் சந்துரு.

காதலென்பது...Where stories live. Discover now