பகுதி - 42

298 27 6
                                    

அடுத்த நாள் காலையிலேயே எழுந்து தயாராகிக் கொண்டு வீட்டு வேலைகளை நிறைவு செய்து விட்டு சன்ஜய்யைப் போய் எழுப்பினாள் சத்யா.

அவனோ "இன்டைக்கு தான் ஆபிஸ் போகலைல கொஞ்சம் லேட்டா எழுந்துக்கிறேனே" என்று விட்டு மறுபக்கம் திரும்பி தூங்க முற்பட்டான்.

சத்யாவோ "ஆபிஸ் போக வேண்டாம்னு சொன்னது வீட்டுல இருந்து தூங்குறதுக்கு இல்லை...இன்டைக்கு டாக்ரடை பார்க்க போகனும்னு சொல்லிருந்தேன்ல" என கோபத்தில் சத்தமிட

"ஐயோ கத்தாத எழுந்துக்குறேன்" என சளித்தவாறே எழுந்து அமர்ந்து கொண்டான் சன்ஜய்.

"மணி ஒன்பது ஆகுது...நான் திரும்ப வந்துட்டு இருக்க மாட்டேன்...ரெடி ஆகிட்டு சீக்கிரமா வரனும்" என கட்டளையிட்டு விட்டு சத்யா நகர்ந்து விட

"இவ என்னடா டீச்சரை விட மோசமா கண்டிச்சிட்டு இருக்கா" என முனுமுனுத்தவாறே எழுந்து கொண்டான் சன்ஜய்.

மீண்டும் சத்யா உள்ளே நுழைந்து "என்ன சொன்ன இப்போ?" என்றாள் புருவங்களை சுருளச் செய்தவாறே

"ஒ...ஒ...ஒன்றுமில்லையே" என சன்ஜய் தடுமாறவும்

"ஆமா...நான் எனக்கு ட்ரீட்மண்ட்கு தான் ஹாஸ்பிடல்க்கு போறேன் பாரு...இந்தக் காலத்துல யாருக்குமே நல்லது செய்ய கூடாது..." என ஆசிர்வாதத்தை ஆரம்பித்த மறுகணம்

"பத்தே நிமிஷத்துல வந்துடுறேன்..." என தப்பினேன் பிழைத்தேன் என வாஷ்ரூமிற்குள் ஓடினான் சன்ஜய்.

அவன் போகவும்
"உண்மையிலேயே டீச்சரை விட மோசமா தான் பண்ரேனா?!" என எண்ணி தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள் அவள்.

இவர்கள் இருவரும் போய் விட்டு வீடு திரும்புகையில் மணி மாலையில் மூன்றைத் தாண்டி விட்டது.

வீட்டுக்குள் வந்து பார்க்க அங்கே ஏற்கெனவே பானு வந்திருந்தாள்.

அவளைப் பார்த்த சத்யா "எப்போ டி வந்த?" என்றாள் ஆனந்த மிகுதியோடே

"நான் வந்து மூணு மணித்தியாலத்துக்கு மேல ஆகுது...அது சரி எங்க போயிட்டீங்க ரெண்டு பேரும்?" என அவள் கேட்க

காதலென்பது...Where stories live. Discover now