பகுதி - 15

403 70 12
                                    

அவன் சென்று ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும் என்ற நிலையிலும் இவர்கள் அவன் சொன்ன இடத்திலேயே தொடர்ந்து காத்திருக்கலானார்.

இருந்தாலும் அவன் மீண்டும் திரும்பி வந்ததாக தெரியவில்லை என்றதுமே "என்ன மீரா இவனை இன்னும் காணல..?" என முனுமுனுக்க ஆரம்பித்தாள் சுபா.

"அதானே இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கானோ..எங்க தான் போனானோ" என தன் பங்கிற்கு சளிப்பை கொட்டினாள் மீரா.

"கொஞ்சம் இருங்கடி..அவன் தான் வர்ரதா சொல்லிட்டு போனான்ல ஏதாவது ப்ளான் வச்சிருக்கான் போல..கொஞ்சம் வெயிட் பண்ணி தான் பார்ப்போமே" என்றாள் அனு.

இவ்வாறு மூவரும் ஆளுக்காள் ஒவ்வொன்று சொல்லி ஆழ்ந்த சம்பாசனையொன்று நடந்தேறிக் கொண்டு இருந்ந அந்த தருணத்தில்..

" ஹூ இஸ் அனு?" என ஒலித்தது ஒரு ஓசை.

பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளியை சட்டென வைத்த அனு திரும்பிப் பார்க்கவே அங்கே தனது வகுப்பாசிரியர் நின்று கொண்டு இருப்பதை பார்த்து விட்டு "நான் புதுசா ஸ்கூலுக்கு வந்து சேர்ந்ததால என்னை இன்னும் தெரியல போல " என எண்ணியவாறே
"நான் தான் மிஸ்" என்றவாறே எழ முற்படவே

அவளது இயலாமையை பார்த்த ஆசிரியர் "இட்ஸ் ஓகே நீ இருமா..உன்னை கூட்டிட்டு போக சகுந்தலா தேவி னு ஒரு மேடம் வந்திருக்காங்க.." என சொல்லவே

யாரென தெரியாமல் எண்ணத்தில் சிலந்தி வலை பிண்ண முளித்துப் பார்த்தாள் அனுவையும் சுபாவையும்.

இதை புரிந்து கொண்ட சுபா "அனு..தேவி ஆண்டி டி நம்ம அதியோட அம்மா" என சொல்லவுமே

கண்கள் இரண்டும் அகல ஆசிரியரை விளித்து "மிஸ் அவங்க எங்க?" என்றாள் ஆச்சரியம் கலந்த தொனியில்

"க்ளாஸ் ரூம்ல தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.." என்ற ஆசிரியர் நகர்ந்து விடவே

அதனைத் தொடர்ந்து எழுந்து நின்று கொண்டாள் அனு.

எழுந்தவள் பிரம்மித்துப் போய் மீரா இருந்த திசையை நோக்கி பார்வையை செலுத்தவே

காதலென்பது...Where stories live. Discover now