பகுதி - 43

417 27 10
                                    

மீரா வீட்டுக்கு போனதுமே அவளைப் பார்த்த அனு "வந்துட்டியா.." என்றாள்.

"ஆமாம் டி" என்றாள் குரலில் உற்சாகமின்றி

"ஏன் டி இப்படி எதையோ இழந்த மாதிரி பேசிட்டு இருக்க...தர்ஷனைப் பார்த்தியா?" என கேட்க

"அனு மனசுக்கு கஷ்டமா இருக்கு டி" என்றாள் என்றும் இல்லாதவாறு

"என்னாச்சு டி" என்றபடி அவளை நெருங்கி வந்தவள் "தர்ஷன் ஏதாவது சொல்லிட்டானா?" என்றாள் உடனடியாக

"அதெல்லாம் இல்லை டி...ரெஸ்ராடன்ட்ல அம்மாவைப் பார்த்தேன்" என மீரா நடந்ததை சொல்ல

"மீரா...இட்ஸ் ஓகே டி...அம்மா மேலயும் பிழை இருக்க தான் செய்யுது...அவங்க நம்மகிட்ட அட்லீஸ்ட் ஒழுங்கா பேசவாச்சும் செய்யனும்..எங்களுக்கு புரிய வச்சிருக்கனும்" என மீராவை சமாதானப்படுத்த முனைந்தாள்.

இப்படியாக ஒரு பதினைந்து நிமிடங்கள் பலவற்றையும் சொல்லி அனு மீராவை சற்று சிரிக்க வைக்கவும்

திடீரென்று மீண்டும் "ஏன் டி இப்படி பண்ண?" என்றாள் மீரா.

"என்ன பண்ணிட்டேன் டி"

"அதிரன் ரொம்ப பாவம் டி நீ வருவன்னு எதிர்பார்த்து வந்திருப்பான் போல...நீ வரலன்னதும் அவன் முகமே வாடி போயிட்டு டி"

"நெஜமாவா? ரொம்ப பீல் பண்ணானா?" என அனு சற்று சந்தேகமாக கேட்கவே

"உண்மையா தான் டி...அவன் முகத்தை பார்த்தே என்னால உணர முடிஞ்சது" என்றாள்.

"எனக்கும் அவனை பார்க்கனும் போல தான் இருந்தது...ஆனா மீட் பண்ணா சிக்கலாகிரும்னு தான் வரல"

"அனு அவனுக்கு உண்மையிலேயே சுபாவை பிடிக்கல போல டி...எவ்வளவு தான் நீ அவனை அவொய்ட் பண்ணாலும் உன்னால அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க முடியாது...முதல்ல அதை புரிஞ்சுகோ"

"இருந்தாலும் எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு டி"

"உன்னோட நேர்மை நியாயம் பற்றி பேசி தப்பிக்க முடியாது ஸோ உனக்கு என்ன தோணுதோ பண்ணிக்கோ" என்றாள் மீரா.

காதலென்பது...Where stories live. Discover now