மணி மூன்றரை எனக் கடிகாரம் காண்பிக்க
கடிகாரத்தின் மேல் பார்வையை வைத்திருந்தவள்பாரதி வரவும் அவளை நோக்கி
"பாரதி போவோமா?" என்றாள்.
"சுபா நீ தானே போக முடியாதுனு சொல்லிட்டு இருந்த..."
"ஆமா சொன்னேன்...ஆனா எனக்கு ரொம்ப பயமா இருக்கு...ஜஸ்ட் போயிட்டு வருவோம்"
"உனக்கு ஓ.கே னா போவோம்" என்றாள் பாரதி.
அவசர அவசரமாக அவன் சொன்ன இடத்தை நோக்கி சென்றவளுக்கு
அருகில் போகப் போக பதற்றம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
"கொஞ்சம் வேகமாக போகலாம் டி" என்றவாறே
ஓட்டமும் நடையுமாக சென்றாள் சுபா.
அங்கே போய்ப் பார்க்க
அவன் சொன்னது போலவே மேல் மாடியில் நின்று கொண்டு இருந்தான் அவினாஷ்.
இதைக் கீழே இருந்து பார்த்தவளுக்கு
இதயத் துடிப்பு நொடிக்கு ஆயிரம் என அடிப்பது போல தோன்றவேகீழிருந்தே அவனைப் பார்த்து கை காண்பித்தாள்.
ஆனால் அவனுக்கு அது தென்படவில்லை போல
"அவினாஷ்" என தன் மொத்த பலத்தையும் கொடுத்து அவள் கத்தினாலும்
அது அவனது காதுகளை சென்றடையவில்லை.உடனே "பாரதி நேரம் என்ன?" என கேட்க
"3:56 ஆச்சு டி" என்றாள்.
ஐயோ என தலையில் கை வைத்த படியே "வா அவசரமா மேல போகலாம்" என
படிவழியே ஏறியவளுக்கு
பல முறை அவள் இந்தக் கட்டிடத்திற்கு வந்திருந்தாலும்
இத்தனை படிகள் இருப்பது அவளுக்கு இன்று தான் புலப்பட்டது
அவளுக்குள் அவ்வளவு பதற்றம்இவள் இவ்வளவு வேகமாகச் சென்றாலும்
அங்கு போய் பார்க்க
அவன் போனில் யாருடனோ கதைத்துக் கொண்டு இருந்தான்.
"அப்படி இல்லை டா...அவளுக்கு என்னை பிடிக்காது னு எனக்கு தெரியாம இல்லை...
என்னை பார்த்தாலே பிடிக்கலனு சொல்ரா..
எனக்கு அவளை எவ்வளவு பிடிக்கும் என்பத வெளிப்படுத்தவே விட மாட்டேங்குறா...எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தா தானே என்னால நிரூபிக்க முடியும்...
சும்மா பிடிக்கல...பிடிக்கல னு எப்படி சொல்ல முடியும்
அவளுக்கு எங்கிட்ட பழகி பார்த்தாவாச்சும் என்னை புடிச்சிராதா னு தான்
இன்டைக்கு அவளை மிரட்டியாவது வர வைக்கலாம்னு
வர சொல்லிருக்கேன்" என்று விட்டு
போனை கட் செய்தான்.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...