பகுதி - 31

349 57 10
                                    

பானு வீட்டு முகவரி , கற்ற கல்வி , மாதாந்த வருமானம் போன்ற அத்தனை விடயங்களையும் கேட்டாலும் கொஞ்சம் கூட சங்கடம் இல்லாமல் பதில் சொன்னான் ஹரிஷ்.

ஆனால் அத்தனைக்கும் இவற்றையெல்லாம் கேட்க அவளுக்கு கடும் சங்கடமாக இருந்தது.

அவற்றை எழுதிக் கொண்டவள் "சரி ஸார்...நான் ஆல்மோஸ்ட் எல்லாவற்றையும் முடிச்சிட்டேன் நாளைக்கு காலேஜ்கு கொண்டு வந்து கொடுத்துடுறேன்" என சொல்லவே

சிறிய நேர அமைதியின் பின்னர் "ஹ்ம்ம்...ஓகே" என பதில் கிடைத்தது.

"சரி அப்போ நான் கட் பண்ணிடட்டுமா ஸார்?" என பானு கேட்கவே

"சரி ஓகே" என சட்டென பதில் கிடைத்தது.

சற்று சுளித்த முகத்தோடு சிவப்பு நிற வட்டத்தை தொட முற்படுகையில்

"ஒன் மினிட்" என சொல்லப்படவே

பட்டென "யெஸ் ஸார்" என்றாள்.

"ஏன் ரெண்டு நாட்களா காலேஜிற்கு வரல?"

இதழில் தோன்றிய புன்னகையோடு
"நான் வரலன்னு உங்களுக்கு எப்படி தெரியும் ?" என்றாள்.

இவள் வண்ணங்களுக்குள் மிதந்து கொண்டு இருக்கையில்

"Assignment நீங்க மட்டும் தான் Submit பண்ணல அதான்" என்றார்.

முகத்தை சுருக்கிக் கொண்டவள் "நாளைக்கு பண்ணிடுறேன்...ப்ரெண்டு ஹாஸ்பிடல்ல இருந்தாங்க அதனால தான் வரல" என்றாள் குரலில் சுவாரசியமின்றி

"okay make it faster" என்று விட்டு அவரே அழைப்பை துண்டித்து விட்டார்.

"Assignment இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை " என வாயிற்குள் முனுமுனுத்தவாறே ,
அவர் கொடுத்த அந்த புத்தகத்தை புரட்டலானாள்.

அங்கே மறுபுறத்தில் சத்யா சன்ஜய்யை நோக்கி "எதுக்கு என்னோட நம்பரை அப்படி சேவ் பண்ணிருந்த " என கேட்க எண்ணியபடி

கட்டிலின் மேல் அமர்ந்திருந்தவள்

"சன்ஜய்" என அவனை மெதுவான தொனியில் அழைத்தாள்.

காதலென்பது...Where stories live. Discover now