பகுதி - 3

1.1K 93 43
                                    

க்ரவுண்டுக்கு போனதும் "என்ன மச்சான் அக்கா வர விடமாட்டா..ஆட்டுக்குட்டி விடமாட்டான்னு சொன்ன.." என தர்ஷன் ஆரம்பிக்க

"கடுப்பா கெளப்பாத மச்சான்..நானே அந்த குட்டி பிசாசுக்கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு ஓடி வந்தா..நீ வேற உசுற வாங்கிட்டு இருக்க" என்றபடி அருகில் இருந்த வாட்டர் போட்டிலை எடுத்து ஏதோ நீரருவில் மூழ்குவது போன்ற எண்ணத்தில் முகத்தில் ஊற்றலானான் அதி.

"ஆனாலும் மச்சான்..அந்த எலிக்குஞ்சுக்கு பயந்து இப்படி ஓடி வந்துட்டியே..உன்னோட வாழ்க்கை வரலாற்றுல இந்த சம்பவத்த பித்தளை எழுத்துல பொறித்து வைக்கனும்டா"

"டேய் தர்ஷா இதுக்கு மேல பேசுனான்னு வையேன்..உன்ன பொறிச்சுடுவேன்" என்ற அதி கையில் இருந்த பாட்டிலை விட்டெறிய நாலு அடி தள்ளி விழுந்தது அது..

"சரி சரி கோவப்படாத மச்சான்..நீ ரொம்ப கோவக்காரன்னு தெரியும்..பெருசா அந்த பொண்ணுகிட்ட காமிரால்லாம் வாங்கி தரேன்னு சொன்ன..ஏன்டா அவ அவ்வளவு கத்துறதையும் பொறுத்திக்கிட்டு நானே வாய மூடிக்கிட்டு இருந்தேன்..நீ போய் இப்படி சொன்னதால இப்போ அநியாயத்துக்கு காசு செலவு பண்ணனும் பாரு"

"இப்போ யாரு வாங்கி கொடுக்க போறாங்க..எனக்கு வேற வெலை இல்லையா.."

"ஏன்டா நீ தானேடா ஸாரி சொன்னா கிடச்சிறும்னு பெரிய டயலாக் பேசுன..இப்போ இப்படி சொல்ர சும்மா விடுவாளா அந்த பிசாசு"

"மச்சான் இதுக்கு மேல அவ எங்கிட்ட வந்து கேப்பானு நினைக்கிறியா.."

"ஏன்டா?!"

"வந்து கேட்டு தான் பார்க்கட்டுமே..என்னோட பர்போமன்ஸ பார்த்து அந்த புலி பதுங்கி பூனையாகிடுச்சிடா"

"அதையும் பார்க்கலாம்டா..அந்த பூனை எப்படி உன்ன கடிச்சி சாப்ட போகுதுன்னு"

"ஆக மொத்ததுல அவ கிட்ட நான் மாட்டிக்கனும் அத பார்த்து நீ சிரிக்கனும்..இதானே உன் ப்ளான்"

"என்னடா உன்னோட உயிர் நண்பன் கிட்டயே போய் இப்டிலாம் பேசுற"

காதலென்பது...Where stories live. Discover now