பகுதி - 4

795 87 39
                                    

அனைவரும் இவர்களை நோக்க
அதிரனுக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல என்ற உவமைக்கு உயிர் கொடுக்குமுகமாக
"என்ன அதி எப்படி..நான் சொன்னத செஞ்சிட்டேனா இப்போ பாரு எல்லோரும் நம்மள தான் பார்க்குறாங்க..ஆரம்பத்துலயே நீ லவ் யூ சொல்லிருந்தா..விஷ்யம் காதும் காதும் வச்ச மாதிரி முடிஞ்சிருக்கும்..நீ தான் சொல்லவே மாட்டேன்னு பிடிவாதமாய் இருந்தியே" என செய்வதையும் செய்து விட்டு டயலாக் பேசலானாள் சுபா.

இதை கேட்ட அதிரனுக்கு கையில் இருப்பதை கொண்டு அவளை அடிக்க தோன்றினாலும் தன்னை இயன்றளவு கட்டுப்படுத்திக் கொண்டவன் "ஏன்டி இப்படிலாம் பண்ர நான் உனக்கு எப்படி தான் புரிய வைக்குறது..என்ன சொல்லி தான் புரிய வைக்கிறது..இப்படி எல்லார் முன்னாலயும் இப்புடி பண்ணிட்டியேடி" என்ற படியே அவளை முறைத்தான்.

அவன் பற்களை இறுகக் கடிக்கும் ஓசையை அங்கு நிலவிய மௌனத்திற்கு மத்தியில் துள்ளியமாக கேட்க முடிந்தது சுபாவினால்..

இதற்கெல்லாம் பயந்து போவபளா நம்ம சுபா

உடனடியாக க்ரவுண்டுக்கு அருகே போய் "என்ன எல்லோரும் இங்க பார்த்துட்டு இருக்கீங்க..வேற வேலையே இல்லைல உங்களுக்கு..!! ஒழுங்கா விளையாட வந்தா விளையாடிட்டு போங்க.." என சத்தமாக சொல்ல

அனைவரும் "எதுக்கு வீண் வம்பு" என தம் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

இவர்களிருவருக்குமருகில் ஓடோடி வந்தான் தர்ஷன்.

தர்ஷனை ஒரு பார்வை பார்த்த சுபா "இப்போ எதுக்கு என்னமோ கொலை நடந்த மாதிரி பதறிட்டு வர்ர" என்றாள்.

அவளுக்கு எதுவும் சொல்லாமல் அதிரனை நோக்கியவன் "என்னடா மச்சான் இதெல்லாம்.." என்றான்.

"டேய் உனக்கு தெரியாததா...!" என சளித்து கொண்டான் அதி.

"அதுக்குனு இவ எதுக்குடா இங்க வந்தா..எதுக்காக நீ இந்த அளவுக்கு போக விட்ட"

காதலென்பது...Where stories live. Discover now