"எப்படி தர்ஷ் சரியா எங்க வீட்டைத் தேடிட்டு வந்த?" என மீரா கேட்க
"அனு இருக்க கவலையேன்...!" என்றான் அவன்.
உடனே அனுவை நோக்கியவள் "அடிப்பாவி அப்போ தர்ஷ் வர்ரது உனக்கு ஆல்ரெடி தெரியுமா?" என்றாள்.
"from the beginning அவளுக்கு எல்லாமே தெரியும்..." என்றான் தர்ஷ்.
"என்னடா சொல்ர?" என மீரா வியக்க
"உனக்கு ப்ரபோஸ் பண்ரது எப்படி னு ப்ளான் கொடுத்ததே நான் தான் டி...ஆனா நீ எங்கிட்ட இருந்து எல்லாத்தையும் மறச்சிட்டள்ல..அதனால தான் நான் உனக்கு சர்ப்ரைஸா அவனுக்கு வர ஹெல்ப் பண்ணினேன்...ஆனா அவன் வர்ரத உங்கிட்ட சொல்லல" என்றாள் அனு.
"அனு மறைக்கனும் னு இல்லை டி நீ அதி வீட்ல இருந்தள்ல...அதனால தான் சொல்ல முடியல" என சமாளிக்க முனைந்தாள் மீரா.
"சொல்லனும் னு இருந்திருந்தா எப்படியாச்சும் சொல்லி இருக்கலாம்" என அனு பொய்யாக கோபிக்க
"நான் சொல்லலன்னா என்ன அதான் தர்ஷ் சொல்லிட்டானே...ஸோ அது நான் சொன்ன மாதிரி தான்" என மீரா சொல்லவும்
"ஆமா அது தானே" என்றான் தர்ஷனும்.
"ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா சமாளிக்குறீங்க" என்ற அனு
"சரி வந்ததுல இருந்து நின்னுட்டு இருக்க...வந்து உட்காரு தர்ஷ்" என்றாள்.
அவன் வந்து அமர்ந்து கொள்ளவும்
வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் ஓசையைக் கேட்டு விட்டு "அனு அம்மா வந்துட்டாங்க போல" என சற்று பயப்பட ஆரம்பித்தாள் மீரா.
"எதுக்கு டென்ஷனாகுர...விடு பார்த்துக்கலாம்" என்ற அனு
தர்ஷனை விளித்து "தனியா தான் வந்தியா?" என்றாள்.
பதிலுக்கு அவனோ "தனியா வந்தியானு கேட்குறியா இல்லைனா அதி வரலயான்னு கேட்குறியா?" என சொல்லவும்
கன்னங்கள் சிவந்து போனாலும் அதை காண்பித்துக் கொள்ளாமல் "இல்லை அப்படி இல்லை ?!" என்றாள்.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...