ஒரு வழியாக மூவரும் அந்த நகரத்திலேயே இருக்கும் ஒரு பெரிய ஷாப்பிங் மாலை வந்துடைந்து விட்டனர்.
அங்கே ஆடைகள் இருக்கும் தொகுதியை முதலில் தேர்ந்தெடுத்து அதை நோக்கி சென்றனர்.
சத்யாவை நோக்கிய அனு "அக்கா உங்க ஊரு சின்ன கிராமம்னு நினைச்சிட்டு இருந்தேன்..பார்த்தா இங்க கூட ஷாப்பிங் மால் எல்லாம் இருக்கே.." என பார்வையிலேயே அதிசயத்தை வெளிப்படுத்தியவாறு கேட்க
"ஆஹ் ஊரு சின்னது தான் ஆனால் டவுன்ல எல்லா கடைகளும் சிட்டியில மாதிரியே இருக்கும் அனு" என்றாள் சத்யா.
"சூப்பர் தான்...இங்கயும் நல்லா தான் இருக்கு" என அனு சொல்லி முடிப்பதற்கிடையே
"அனு நாம இங்க வந்தது முக்கியமா உனக்கு ட்ரெஸ் எடுக்க தான்.." என குறுக்கிட்டாள் சத்யா.
"என்னக்கா சொல்ர ? என்கிட்ட தான் ஆல்ரெடி நிறைய ட்ரெஸ் இருக்கே"
"ஆமாம் இருக்கு...ஆனா அது எதுவுமே ட்ரெஸ் மாதிரியா இருக்கு...எப்போ பாரு மாடர்ன் ட்ரெஸ்ஸா போட்டுட்டு இருக்க..எனக்கு சுத்தமா புடிக்கலை..முதல்ல உன் ட்ரெஸ்ஸின் ஸ்டைல சேன்ஜ் பண்ணனும்"
"ஆமா..நல்லா நம்ம ஊரு பொண்ணுங்கள மாதிரி இவளை மாத்தி விட்டுறுக்கா" என தன் பங்கிற்கு அதிரனும் சொல்ல
"அக்கா..எனக்கு சுடிதார்..பாவாடை..சேலை..இதெல்லாம் புடிக்காது ப்ளீஸ் வேணாம்" என அனு கெஞ்சினாலும்
"என்ன புடிக்காது...வா நான் ஸெலெக்ட் பண்ணி தரேன் அதை போட்டு பாரு உனக்கு கண்டிப்பா புடிக்கும்..." என்றாள் சத்யா பிடிவாதமாக
"ஆமாம் அனு..அக்கா சொல்ர மாதிரி நீ அதெல்லாம் போட்டா ரொம்ப அழகா இருப்ப..ட்ரை பண்ணி பாரேன்" என்றான் அதியும்.
"சரி..நீங்க ரெண்டு பேரும் சொல்ரதுக்காக ட்ரை பண்ணி பார்க்குறேன்.." என அனு ஒரு வழியாக விருப்பத்தைத் தெரிவிக்கவே
ஒரு பெருமூச்சுடன் சேர்ந்த சிரிப்போடு திருப்தியடைந்தாள் சத்யா.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...