பகுதி - 37

470 30 6
                                    

ஒரு வாரத்திற்கு பிறகு...

சத்யா மீண்டும் காலேஜிற்கு போக வேண்டும் என எண்ணி முதலில் ஹாஸ்டெலுக்கு மற்றும் காலேஜிற்கு செலுத்த பணம் வேண்டும் என்பதற்காக காலெஜிற்கு சென்று கொண்டே செய்யக் கூடியவாறு ஒரு வேலையைத் தேடிக் கொண்டு இருந்தாள்.

அவள் வேலை தேடிச் சென்று இருந்த அந்த நேரம் பார்த்து அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அட்டண்ட் செய்தவள் "ஹலோ யாரு?" எனக் கேட்க

"ஹலோ" என எதிரில் இருந்த நபர் பேசிய குரலை வைத்தே கண்டு பிடித்தவள்

இன்ப அதிர்ச்சியோடே "சன்ஜய்..." என்றாள்.

"ஆமா நானே தான் சத்யா ...
இப்போ நான் உடனடியாக உன்னை பார்க்கனும்...நீ எங்க இருக்க?" என்றான் எடுத்தவுடனேயே

"நீ எங்க இருக்க சன்ஜய்...நானும் உன்னை பார்க்கனும்...உங்கிட்ட பேச நிறைய விஷயங்கள் இருக்கு...உங்கிட்ட நிறைய பேசனும் சன்ஜய்..." என சொல்லி முடிக்கையில் அவளது குரல் இலேசாக அழுகுரலாக மாறத் தொடங்கியது.

"நீ எந்த ஊர்ல இருக்கியோ அங்க தான் நானும் இருக்கைன்...அட்ரஸ் வாட்ஸ்அப்ல சென்ட் பண்ரேன் வந்துடு...மற்றது எல்லாமே வந்ததும் பேசிக்கலாம்" என்றான்.

"உடனே அனுப்பு நான் இப்போவே வரேன்..." என அவள் சொல்லி விட்டு கட் செய்தாள்.

அவன் அட்ரஸை அனுப்பவும் அந்த இடத்திற்கு ஆட்டோவில் ஏறி உடனே விரைந்தவள் போய்ப் பார்க்க அது ஒரு ரெஸ்டாரன்ட் ஆக இருந்தது.

அந்த பிரம்மாண்டமான வாசல் வழியே பூனையைக் கண்ட எலி போல பதுங்கி பதுங்கி உள்ளே நுழைந்தவள்

கண்களை அலைய விட்டு அவளைத் தேட முனைந்தாள்.

இது தான் இவ்வளவு பெரிய ஒரு ரெஸ்டாரன்ட் இற்கு அவள் வருகின்ற முதல் தடவை.

அங்கிருந்த மனிதர்களையும் அந்த இடத்தின் விசாலத்தையும் பங்களாக்களில் இருப்பது போன்ற கலை வேலைப்பாடுகளையும் பார்த்து மிரண்டு போனவள்

காதலென்பது...Where stories live. Discover now