அனு அந்த லெட்டரை எடுத்துக் கொண்டு வந்து அதிரனிடம் கொடுக்கவும்
மறுகணமே அதை வாங்கிக் கொண்டவன்
அதில் இருந்ததை படிக்கத் தொடங்கினான்.அதிரா...
அக்காவை நீ புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கைல தான் இதை நான் உன்கிட்ட சொல்ல முடிவு எடுத்தேன்.
இவ்வளவு நாளா நான் உன்கிட்ட எதையுமே மறச்சது இல்லை ஆனா இந்த ஒரு விடயத்தை தவிர...
இப்பொழுது முழுதாக இதைப்பற்றி சொல்ல எனக்கு நேரம் போதவில்லை...நான் எப்படியும் இன்னும் ஒரு இரண்டு மூன்று நாட்களில் திரும்பி வருவேன் நான் வந்ததும் முதல் வேலையாக அத்தனை விடயங்களைப் பற்றியும் முழுமையாக உன்னிடம் சொல்வேன்..
தயவு செய்து இப்போதைக்கு அம்மா அப்பாக்கிட்ட நான் அவசரமா காலேஜிற்கு போய் இருக்கிறதா சொல்லி சமாளிச்சிருடா..
அக்கா உன்னை நம்பி தான் டா கிளம்புறேன்..என அதில் எழுதி இருந்ததை படித்தவனுக்கு எதுவும் புரியவில்லை.
இருந்தாலும் தன் அக்காவின் மேல் அவன் வைத்திருந்த நம்பிக்கையில் அவனுக்கு துளி கூட குறைவு ஏற்பட்டு விடவில்லை.
உடனே அனுவை குழப்பத்தோடு நோக்க
அவளோ "என்னடா..?!" என்றாள்.
"இல்லை அனு...நீ இதை வாசித்து பார்த்தியா.." என்றான் அவன்.
எதுவும் பேசாதவள் இல்லை என தலையை வலதும் இடதுமாக அசைத்தவாறே
"பர்ஸ்ட் லைன் படிச்சு பார்த்ததுமே அக்கா உனக்கு தான் எழுதி இருக்காங்கனு புரிஞ்சது..அதான் மேல வாசிக்காம கொண்டு வந்து கொடுத்தேன்" என்றாள் பதிலுக்கு
மறுகணமே அதை அவளிடம் வாசித்துப் பார்க்கும் படியாக நீட்டினான் அதி.
தயங்கியவாறே அதை வாங்கி படித்துப் பார்த்தவள் "எனக்கு ஒன்னுமே புரியலடா.."என்றாள்.
"ஆமா எனக்கு மட்டும் crystal clear ஆஹ் புரிஞ்சிடுச்சி பாரு" என்றவனை
சிரித்தவாறே நோக்கியவள் "இப்போ என்னடா பண்ரது?" என்றாள்.
"அக்கா சொல்லி இருக்குற மாதிரியே சமாளிச்சிருவோம் டி...அதான் ரெண்டு மூனு நாள்ல வர்ரதா சொல்லிருக்காங்களே.." என அதி சொல்ல
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...