பகுதி - 46

172 21 13
                                    

அன்று இரவு சத்யாவின் அப்பா வெளியில் இருந்த தோட்டத்தில் அமர்ந்தவாறு காற்று வாங்கிக் கொண்டு இருந்த அந்த நேரம் சன்ஜய் போய் அவர் அருகில் அமர்ந்து கொண்டான்.

அவனைப் பார்த்ததும் "வந்து உட்காருப்பா" என்றார் அவர் அவன் அமர முன்னரே

"அப்பா...முதல்ல நான் உங்கக்கிட்ட மன்னிப்பு தான் கேட்கனும்...அதை கேட்குற தகுதி கூட எனக்கு இருக்கானு தெரியல" என அவன் தயங்கி தயங்கி சொல்ல

"சரி விடு பா...இனிமேல் நடக்க வேண்டியதைப் பார்க்கலாமே..." என்று விட்டு

"மாமா னு உரிமையா சொல்லலாமே" என்றார்.

"இல்லை எனக்கு அப்பா னு சொல்ல தான் பிடிச்சிருக்கு...மாமா னு சொல்லி பிரிச்சு பார்க்க வேண்டாமே...எனக்கு நீங்களும் அப்பா மாதிரி தானே"

"என் பொண்ணுக்கு நானே மாப்பிள்ளை பார்த்து இருந்தா கூட இப்படி ஒரு பையனை நான் பார்த்து இருப்பேனானு தெரியல...இன்றைக்கு நாள் முழுக்க நீங்க எல்லோருடனும் நடந்து கொண்ட பேசுன விதம் இதையெல்லாம் பார்த்து ஒரு நாள்லையே எனக்கு உங்களை அவ்வளவு புடிச்சு போயிட்டு...என் பொண்ணு நீங்க தான் வேணும்னு அடம் பிடிச்சு நின்றதுல தவறே இல்லை னு தோணுது..." என்று விட்டு

"அது சரி உன்னோட அப்பா அம்மா எங்க பா.." என்றார்.

"எனக்கு குடும்பம் யாரும் இல்லை" என சன்ஜய் சொல்லி

அவரது முகத்தில் கவலை தொற்றிக் கொண்ட அந்த நேரம் அங்கு வந்த சத்யா

"நீங்க எனக்கு அப்பாவா இல்லை இவனுக்கு அப்பாவானே தெரியல வந்ததுல இருந்து எங்கிட்ட விட அவங்கிட்ட தான் கதைச்சிட்டு இருக்கீங்க" என்றாள்.

"இவ்வளவு நாளா உனக்கு மட்டும் தான்...ஆனால் இனிமேல் சன்ஜய்யிற்கும் நான் அப்பா மாதிரி தான்" என்றார் .

இதைக்கேட்டு சன்ஜய் கண் கலங்க
"ஒரே எமிஷோனல் ஆகிட்ட போல" என அவனை சிரிக்க வைப்பதற்காக கலாய்த்தாள் சத்யா.

"சத்யா...." என எரிச்சலோடு சன்ஜய் கத்த

"அப்பா பாருங்க பா உங்க முன்னாடியே எப்படி என்கூட சண்டை போடுறான்னு" என சத்யா வம்பிழுக்கவே

காதலென்பது...Where stories live. Discover now