பானு அந்த சிவப்பு நிற சேலையைக் கட்டி ஆபரணங்கள் அணிந்து தரையிறங்கிய தேவதைத் தோற்றத்தில் தயாராகிக் கொண்டு இருந்தாள்.
அத்தனைக்கும் அவள் அம்மா வந்து "பானு நான் அடுத்த தடவை வருவதற்குள் தயாராகியிருக்க வேண்டும்." என அவளிடம் சத்தமிட்டதனால் தான் அவள் எழுந்து தயாராகவே ஆரம்பித்திருக்கிறாள்.அவள் ஒரு பத்து நிமிடங்கள் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருக்கவே
"அக்கா சீக்கிரமா வா கீழ போகனும்" என திடீரென ஒரு ஓசை கேட்டு திடுக்கிட்டவள் எழுந்து கொள்ள எதிரில் பாரதி நின்றிருந்தாள்.
"பாரதி...அவங்க வந்துட்டாங்களா?!" என்றவள் குரலில் சற்றும் உற்சாகம் இருக்கவில்லை.
"ஆமாம் டி..வா உன்னை கூட்டிட்டு வர சொல்றாங்க...அக்கா நீ முகத்தை இப்படி வச்சிக்கவே தேவையில்லை..மாப்பிள்ளை செம்ம ஹான்ட்ஸ்ஸம் ஆஹ் தான் இருக்காரு" என அவள் கேட்காத விடயங்களைப்பற்றியெல்லாம் பாரதி சொல்ல
"பாரதி போவோமா?!" என்றாள் அவள் வாயை மூட வேண்டும் என்பதற்காக
கீழே சென்றவள் தரையைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
அவளை சூழ அனைவரும் அமர்ந்தவண்ணம் ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தாலும் அவள் காதில் எதுவுமே விழவில்லை.
அவள் கவனம் அங்கு இருக்கவே இல்லை.
சத்யா காபி போட்டு எடுத்துக் கொண்டு போய் சன்ஜய்யிடம் கொடுத்து விட்டு
"சன்ஜய் நான் காலேஜிற்கு போகிறேன்" என்றாள்.
"ஆல்ரெடி லேட் ஆச்சு எப்படி போக போற" என அவன் கேட்க
"அவசர அவசரமா ரெடியாகி போக வேண்டியது தான்...எல்லாம் உன்னால வந்தது...நீ ஏர்லியா எழுப்பி இருந்தா சரி" என முகத்தை சுருளச் செய்து கொண்டாள்.
"நீ காலேஜிற்கு போக மாட்டன்னு நெனச்சேன்" என்றான் அவன் சிம்பிளாக
"ஆமா...இங்க உன்னோட இருந்து கஷ்டப்படுறதுக்கு நான் பேசாம காலேற்கே போகலாம்" என அவள் வாயில் முனுமுனுத்ததை
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...