பகுதி - 47

174 19 10
                                    

அன்று மாலை பானு தனக்கு வேறு ஒரு வேலை இருப்பதாக சொன்னதால் சத்யா சன்ஜய்யிற்கு வர சொல்லி அவனோடு வீட்டுக்கு வந்து விட்டாள்.

பானு தான் சொன்ன ரெஸ்டாரன்ட் இற்கு போய் பார்க்க அங்கு இன்னும் ஹரிஷ் வந்திருக்கவில்லை.

சரி என போய் அமர்ந்தவாறு காத்திருக்கலானாள்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து அவன் வரவும்

முகத்தை திருப்பியவாறு அமர்ந்து கொண்டாள் பானு.

"ஸாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சி" என்றான் அவன்.

"பர்ஸ்ட் டைம் மீட் பண்ணலாம்னு வர சொன்னா...முதல் தடவையே லேட் ஆ வர்ரது நீ மட்டுமா தான் இருக்கும்"

"பானு...அது இல்லடா கொஞ்சம் வேலை இருந்துச்சி"

"சரி விடு...இப்போ சண்டை போட்டு டைம் வேஸ்ட் பண்ண முடியாது...டைரேக்டா விடயத்தை சொல்லிட்டு போயிடுறேன்..."

"சரி சண்டை போட வேணாம் ஆனாலும் என்ன அவசரம்...லேட் ஆனாலும் பரவாயில்லை நான் ட்ராப் பண்ரேன்.."

"லேட் ஆகலன்னாலும் நீ தான் ட்ராப் பண்ணனும்..."

புன்னகைத்தவாறே சரி என தலையசைத்தவன் "என்ன சொல்லனும் சொல்லு" என்றான்.

"அது இல்லை...நமக்கு engagement ஆகி இருக்குற விடயம் காலேஜ்ல யாருக்கும் தெரிய வேண்டாம்...நான் இதை சொன்னா நீ எப்படி எடுத்துப்பனு தெரியல...முக்கியமா என்னோட ப்ரெண்ட்ஸ் யாருக்கும் தெரிய வேண்டாம்..."

"அதுல ஒன்னும் ப்ராப்லம் இல்லை...நான் யார்கிட்டயும் சொல்லல...பட் ரீஸன் என்னனு தெரிஞ்சுக்கலாமா..."

"அது...ரீஸன் என்னனா"

"ஏன் பானு உனக்கு என்னை புடிக்கலயா" என ஹரிஷ் சீரியஸாக கேட்க

"அதெல்லாம் இல்லை...கலாய்ப்பாங்க...அதனால தான் சொல்ரேன்" என பானு சொன்னதும்

கட்டுப்படுத்த முடியாது சிரித்தவன் "இது தான் உன்னோட பிரச்சினையா" என்றான்.

"ஹேய் ப்ளிஸ் சிரிக்காத சரினு சொல்லு" என கெஞ்சினாள் அவள்.

காதலென்பது...Where stories live. Discover now