இப்படியாக சுஜாதா இவர்கள் இருவரையும் வீட்டை விட்டு துரத்துவதற்கு ஓயாமல் ஒவ்வொரு வேலைகளை செய்ய இவர்களும் எதையும் கண்டு கொள்ளாமல் பல நேரங்களிலும் எதிர்த்து பேசி சண்டையிட்டு சில நேரங்களிலும் நாட்களை கடத்திக் கொண்டு இருந்தனர்.
ஆனால் இது எதுவுமே இருவரினதும் மாமாவின் காதுகளுக்கு எட்டவில்லை.சுஜாதாவும் காட்டிக் கொள்வதில்லை அனு மற்றும் மீராவும் எதையும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லை.இப்படியாக நாட்கள் நகர அந்த வாரத்தில் சுஜாதா கோயிலுக்கு போகும் நாள் வரை காத்திருந்து இருவரும் அதிரனின் வீட்டிற்கு சென்றனர்.
இவர்களது நல்ல நேரம் அது ஒரு விடுமுறை நாளும் கூட அதனாலேயே தேவியும் ரத்னவேலும் வீட்டிலெயே இருந்தனர்.
முதலில் மீரா வீட்டிற்குள் போக அவளைத் தொடர்ந்து அனுவும் சென்றாள்.
இவர்கள் வருவதைப் பார்த்து ஏதோ சீரியஸாக எழுதிக் கொண்டு இருந்த தேவி சட்டென பேனாவை கீழே வைத்து விட்டு "அட என்ன இது இரண்டு பேரும் அதிசயமா வீட்டுப் பக்கம் வந்திருக்கீங்க..சத்யா இருந்தா தான் வருவீங்க..இப்போ அவ இல்லைனதும் வர்ரதே இல்லைல.." என்றபடியே
"அதி...இங்க வாயேன் உன்னோட ப்ரெண்ட்ஸ் வந்திருக்காங்க" என சத்தமிட்டு அழைத்தார்.
தனது அறையில் இருந்த அதிரன் தர்ஷனோ அல்லது சந்துருவாக இருக்குமோ என எண்ணி பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து பார்க்க இவர்களை கண்டதுமே சற்று மாறிய முகத்தோடு "ஹாய்.." என்றான்.
இதற்கு காரணம் கடந்து வந்த அத்தனை நாட்களிலும் இவர்கள் இருவருமே அதிரனுடன் பெரிதாக பேசுவதோ பழகுவதோ இல்லை என்பது தான்..
இவ்வாறு அவனை விட்டு விலகி இருப்பதற்கு இவர்களிடம் தகுந்த காரணம் இருந்தாலும் அவனைப் பொறுத்தவரை இவர்கள் அவனை வேண்டுமென்றே ஆவனை அவொய்ட் செய்வதாக தான் எண்ணிக் கொண்டு இருந்தான்.
பதிலுக்கு மீரா "ஹாய்.." என சொல்ல
ஒரேயடியாக "என்ன விஷ்யம்?" என்றான் அதி.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...