பகுதி - 32

332 55 31
                                    

சத்யா வீட்டிற்கு போய் விட சன்ஜய் அவனது ஊருக்குப் போய் விட்டான்.

அங்கே அந்த பழைய வீட்டினுள் பதுங்கி பதுங்கி நுழைந்தவன் பாட்டியைத் தேடிப் பார்க்க
நோய் வந்தால் கூட சுருண்டு உறங்காத தன் பாட்டி இன்று கட்டிலிலேயே நாழும் பொழுதும் இருப்பதைப் பார்த்து அவன் முகம் வாடிப் போனது.

உடனே அவர்கள் அருகே ஓடியவன் கட்டிலில் அமர்ந்து கொண்டபடியே
அவர்களைப் பேசினாலும் எந்த வித பதிலுமே சொல்லவில்லை.

இவன் வந்ததைக் கண்ட பக்கத்து வீட்டுப் பெண் உள்ளே நுழைந்தவாறே
"சன்ஜய் எப்போப்பா வந்த?" என்றார்.

"இப்ப தான் அக்கா...பாட்டிக்கு என்ன ஆச்சு நல்லா தானே இருந்தாங்க" என கேட்க

"திடீருனு இரண்டு நாளைக்கு முதல்ல காய்ச்சல் வந்ததுப்பா...அப்பவும் நல்லா தான் வேலையெல்லாம் செய்துட்டு இருந்தாங்க...நேற்று மயங்கி விழுந்துட்டாங்க நல்ல வேலை நான் கண்டேன்...ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகவும்
ரொம்ப வயசானதால ட்ரீட்மன்ட் எதுவுமே பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்க...அதான் வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டோம்" என்றார்.

இதைக் கேட்டு விட்டு பாட்டியின் அருகே சென்று நிலத்தில் முழங்கால்களை ஊன்றி அமர்ந்து கொண்டவன் அவரது தலையைத் தடவியவாறே கண்ணீர் விட ஆரம்பித்து விட்டான்.

அந்த நேரம் அவனைப் போலவே அவனது பாட்டியின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.

அவர் ஏதோ அவனிடம் சொல்ல முற்பட்டாலும் அவரால் வாயைக் கூட திறக்க முடியவில்லை.

இவன் வந்த செய்தியைக் கேட்டு சுற்றி இருந்த நபர்கள் எல்லாம் இவர்கள் வீட்டில் கூடத் தொடங்கி விட்டனர்.

இவனுக்கோ என்ன நடக்கிறது என்பது கூடப் புரியவில்லை.

இவன் மெதுவாக எழுந்து சென்று முதலில் வந்த பக்கத்து வீட்டு அக்காவிடம் போய்

"என்ன விடயம் ? ஏன் எல்லோரும் இங்க வர்ராங்க ? " என கேட்க

அவர் "சன்ஜய் உன்னோட பாட்டி இறந்து போறதுக்கு முன்னால உன்னோட கல்யாணத்தை பார்க்கனும்னு ஆசைப்பட்டாங்க...அதனால தான் நீ வந்ததும் எல்லோரும் நீ கல்யாணம் பண்ணிப்பனு நினச்சி ஒன்று கூடுறாங்க னு நினைக்கிறேன் " என்றார்.

காதலென்பது...Where stories live. Discover now