"அது சரி அப்போ ஏன் அதி அவ்வளவு கோபத்தோட சத்தம் போட்ட..பாவம் சுபா எவ்வளவு கவலைப்பட்டா தெரியுமா..?" என மீரா கேட்கவும்
"சத்தியமா நான் வேணும்னு அப்படி பேசல..கோபத்துல ஏதேதோ கத்திட்டேன்..ரொம்ப ஸாரி மீரா" என்றான்.
"எனக்கு எதுக்கு ஸாரி சொல்ர..நீ ஸாரி சொல்ல வேண்டியது சுபாவுக்கு தான்"
"ஐயோ அவளுக்கு ஸாரிலாம் சொல்ல தேவையே இல்லை நாளைக்கே எல்லாத்தையும் மறந்துட்டு நார்மல் ஆகிடுவா..சுபா இதயெல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டா"
"இருந்தாலும் அதி நீ பண்ணினது தப்பு தானே அவ நீ ஸாரி சொல்லனும்னு எதிர்பார்க்கலன்னாலும் நீ சொல்ல தானே வேணும் " என்றாள் அனு.
"அதி நீ சுபாகிட்ட இருந்து வேணும்னாலும் தப்பிக்கலாம் ஆனால் இந்த நியாயம் நீதினு திரியுர அனுக்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுறது கொஞ்சம் இல்லை ரொம்பவே சிரமம் தான்" என மீரா சொல்ல
அனுவை நோக்கியவன் "சரிங்க தாயே நான் கண்டிப்பா ஸாரி சொல்லிடுறேன்" என்றான்.
"வெரி குட்" என்றபடியே பதிலுக்கு சிரித்தாள் அனு.
இப்படி கதைத்தவாறே வீட்டுக்கு போய் சேர்ந்தனர் மூவரும்.
அதிரன் வழமையாக வீட்டுக்கு போய் சேருகையில் வீட்டில் யாருமே இருப்பதில்லை..அவன் அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போய் இருப்பார்கள்..பகல் உணவை காலையிலேயே சமைத்து வைத்து விட்டுப் போய் விடுவார் தேவி அதனால் அதிரன் தன் பாட்டில் வீட்டிலேயே தனியாக இருந்து விடுவான்.
அங்கே மீராவும் அனுவும் வீட்டுக்குள் நுழையவும் வாசலிலேயே அமர்ந்து இருந்தார் சுஜா.
இவர்கள் கண்டு கொள்ளாமல் மெதுவாக உள்ளே நுழைய முற்பட்டாலும்
சுஜாவோ காலையில் நடந்த சம்பவத்தை மறந்ததாக தெரியவில்லை.
ஆனாலும் அதைப் பற்றி மேலும் பேசி பயனில்லை என அறிந்தவள் இதை வேறு வழியில் பழிதீர்க்க திட்டம் தீட்டி இருந்தாள்.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...