ஆரம்பத்தில் அவள் திசை நோக்காமல் இருந்தவன் ஒரு கட்டத்தில் தன் பொறுமையை இழந்தவனாய் அவளை நோக்கி கண்புருவங்கள் சுருள "என்ன?" என்றான்.
அவன் இப்படி கேட்கவுமே இதற்கு தான் எதிர்பார்த்து இருந்நவளாய் ஒரு மெல்லிய சிரிப்போடு "ஒரு வழியா மௌன விரதம் கலைஞ்சதா?" என்றாள்.
இருந்தாலும் அவள் அவனை நோக்கிய விதத்தில்
அவனது உள்ளம் சற்று கலைந்து தான் போனது.
சட்டென "ஏன் அனு ? என்ன பிரச்சினை உனக்கு ?" என்றான் வேறேதோவொரு திசையை நோக்கி பார்வையைத் திருப்பியவாறே..இவனைப் பார்த்து வேடிக்கையாய் சிரித்தவாறே "ஆமாம் பிரச்சினை இப்போ எனக்கு தான்ல" என்றாள் அனு.
வேறெங்கோ நோக்கி நின்றிருந்தவன் இவள் சொன்னதைக் கேட்டு சட்டென இவள் பக்கம் பார்வையைத் திருப்பி "இப்போ நீ என்ன சொல்ல வர?" என கேட்க
கட்டியிருந்த கைகளை அவிழ்த்து கீழே விட்டவள் அத்தோடு சேர்ந்து பெருமூச்சொன்றையும் வெளியேற்றி விட்டவாறே அவனை நோக்கி "இப்பொழுது நீ முன்ன மாதிரி இல்லை அதி" என்றாள்.
அவள் முகமும் அவள் சொன்னதை உணர்த்தும் படியாகத் தான் இருந்தது.
"என்ன முன்ன மாதிரி இல்லை...நான் எல்லாம் ஒன்றும் மாறல..அதே மாதிரி தான் இருக்கேன்.." என்று விட்டு தன் ஓரவிழியால் அவளை நோட்டம் விட்டவாறே
"ஆனால் சிலர் தான் மாறிட்டாங்க..." என சொல்லி முடிப்பதற்கு இடையே
"அனு.." என சத்தமாக அழைத்த மீராவின் குரலால் திசைதிரும்பியள்
அதிரன் சொன்னதை காதில் வாங்க தவறி விட்டாள்.
அவள் அந்தக் கட்டால் குதித்து வந்த வேகத்தில் இவனுடன் பேசிக் கொண்டு இருந்ததை மறந்தவளாய் அவளை நோக்கி விரைந்து சென்று "என்ன...என்ன மீருமா என்னாச்சு?" என்று வினவ
"இன்னும் இரண்டு நாட்கள்ல அம்மா எங்கள கூட்டிட்டு போக வராங்களாம்" என மீரா சொன்னது தான் தாமதம்
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...