மூவரும் அதிரனின் வகுப்பறை வாசலில் போய் நிற்க அது இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
ஒரு கடதாசியை சுருட்டி பந்தாக மாற்றி கிரிக்கெட் விளையாட அங்கே வகுப்பறையே மைதானக் கோலம் பூண்டு இருந்தது.
இவர்கள் வந்ததைப் பார்த்த சந்துரு "என்னாச்சு...எதுக்கு வந்திருக்கீங்க" என்றபடியே இவர்களை நோக்கி நடை போடவும்
"அதிரனுக்கு கொஞ்சம் வர சொல்லேன்" என்றாள் சுபா கடுமையான கோபத்தோடு.
தீவிரமாக விளையாடிக் கொண்டு இருந்தவன் அருகில் போய் "அதி உன்னை சுபா கூப்டுறா" என சொல்லவுமே
"அப்றொமா வர சொல்லு இப்போ நான் பிஸி" என சாதாரணமாக சொன்னான் அதி.
இது இவர்களது காதிலும் விழத் தான் செய்தது.
அவன் சொன்னதை கேட்டதும் மேலும் கோபத்தை அடக்க முடியாமல் "அதி இப்போ வர்ரியா இல்லையா.." என சத்தமிட்டாள் சுபா.
உடனே முகத்தை சுளித்தவன் விறு விறு என அவளருகே வந்து "என்ன?" என்றான்.
"என்னது..என்னனு என்கிட்ட கேட்குறியா காலைல நான் கொடுத்த பைல் எங்கடா..இன்னமும் வந்து சேரலனு..அந்த காண்டாமிருகம் என்ன கடிச்சி சாப்ட பார்க்குது.."
அப்பொழுது தான் நியாபகம் வந்தவன் சட்டென மாறிய முகபாவனையோடு "ஓஹ்..ஷிட்" என தலையில் கை வைத்தவாறே "ஸாரி சுபா மறந்தே போயிடுச்சி" என்றான்.
"ஈஸியா சொல்லிட்டல்ல..சரி இப்போ என்கிட்ட கொடு நானே கொண்டு போய் கொடுக்குறேன்.."
"சரி கொஞ்சம் இரு" என்றவாறே தான் வைத்த டேபிலில் போய் பார்க்க அங்கே அது இல்லை என்றதுமே
பதறிப் போனவன் "ஐயோ எங்க போச்சோ..." என புலம்பியபடியேயே அங்கு இங்கென தேடிப் பார்த்து விட்டு எங்கேயுமே இல்லை என்றதும்
பூனை போல பதுங்கி பதுங்கி சுபாவின் அருகே போய் "சுபா..அது" என இழுக்கவே
"என்னடா அது.." என தன் சத்தத்தால் அவன் வாயை அடைத்தாள் சுபா.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...