திருமண ஏற்பாடுகள் நடைபெற்று முடிந்து முகூர்த்தத்திற்கான நேரமும் வந்து விட்டது.
சன்ஜய்யோ வேறு யாருடையதோ திருமணத்திற்கு வந்திருப்பது போல தயாராகிக் கொண்டு வந்து ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான்.
சத்யா ஒரு புறம் கையில் மொபைலோடும்
மறுபுறம் தூரத்தில் இருந்து இவன் செயல்களைக் கவனித்தவாறும் நின்றிருந்தாலும் அவள் எண்ணம் முழுக்க நிறைந்திருந்தது அவனுள் ஏற்பட்டு இருக்கும் இந்த மாற்றம் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பது தான்.இவள் மேலும் தாமதிக்காமல் அவன் எதிரில் போய் நின்று "சன்ஜய் என்ன பண்ணிட்டு இருக்க நீ ? உனக்கு தான் கல்யாணம் அது தெரியுமா உனக்கு ?" என கேட்க
அவள் எதிர்பார்த்தற்கு மாறாக "ஆமா தெரியும் ? அதை ஏன் நீங்க கேட்குறீங்க?" என்றான்.
"சபாஹ்ஹ்..." என தலையில் அடித்துக் கொண்டவள்..."சரி அப்போ யாரு நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு?" என்றாள்.
"அதோ...அங்க இருக்காள்ல " என அவன் கை காண்பித்த திசை வழியே அவள் நோக்க
அங்கே தமிழ்ச்செல்வி நின்றிருந்தாள்.
அவள் தன் தோழிமாருடன் கதைத்த படி இருக்கவேஅதை பார்த்துக் கொண்டு இருந்த சத்யாவிடம்
"என்ன மேடம் உங்களுக்கு பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கோ பார்த்துட்டே இருக்கீங்க" என்றான் சன்ஜய்.இதைக் கேட்டவளுக்கு பச்சை மிளகாயைக் கடித்தது போல உரைப்பு தலைக்கேற "டேய் அவ தான் நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணா...லூசு மாதிரி பேசாதே..அவளை தான் நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அவங்க அப்பாக்கிட்ட சொன்னன்னு சொன்னியே" என்றாள் கோபத்தோடே
"அவ்வளவு லட்சனமான பொண்ணு அதைப் போய் கட்டிக்க மாட்டேன்னு சொல்ல நான் என்ன முட்டாளா?" என அவன் பதிலளிக்க
கொதித்தெழுந்த கோபத்தை விரல்களுக்குள் அடக்கியவாறே "சன்ஜய் நீ என்னை தான் கட்டிக்கனும்" என்றாள் சத்யா.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...