சத்யா என்ன நடக்கிறது என சுதாகரித்துக் கொள்வதற்குள் நடந்தேறிய மாற்றங்களால் அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டு இருக்க
எதிரில் கைகளில் கேக் உடன் சன்ஜய் மற்றும் பானு நின்றிருந்தவாறே
"ஹாப்பி பர்த்டே" என்றனர் ஒருமிக்க
அதனைத் தொடர்ந்து பின்னால் நின்றிருந்த அவளது காலேஜ் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து "ஹாப்பி பர்த்டே சத்யா" என கத்தலாயினர்.
அவளுக்கோ இந்த மாதிரி அனுபவம் வாழ்க்கையில் முதல் தடவை என்பதால் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
உடனே பானுவைக் கட்டியணைத்துக் கொண்டவள்
"இன்டைக்கு என்னோட பர்த்டே னு எனக்கே மறந்து போயிடுச்சி டி
நீ நியாபகம் வச்சிட்டு இவ்வளவு ஏற்பாடு பண்ணிருக்க " என அழுகுரலோடு சொல்லவேஅவள் கண்ணீரைத் துடைத்து விட்ட பானு "லூசு அது எப்படி டி என்னால மறக்க முடியும்...
நான் காலையில நேரத்தோட கிளம்பி வந்தது இதுக்காக தான்...
உன்னை கூட்டிட்டு வந்தா சர்ப்ரைஸ் மாட்டிக்கும் ல அதனால தான் விட்டுட்டு வந்துட்டேன்" என்றாள்.அவள் கன்னத்தில் முத்தமிட்டவாறே "லவ் யூ டி...லவ் யூ சோ மச்" என்றாள் சத்யா.
"நான் நேற்று இரவு பன்னிரண்டு மணிக்கு சரியா சர்ப்ரைஸ் பண்ணலாம்னு தான் சொன்னேன் பட் சன்ஜய் தான் இரவு நேரத்துல பொண்ணுங்க வெளியில நடமாடுறது அவ்வளவு நல்லது இல்லை னு நாளைக்கு வச்சுக்கலாம்னு சொன்னான்" என பானு சொல்ல
சன்ஜய்யின் செயல் மீண்டும் அவள் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டது.
அத்தோடு "சத்யா ப்ளான் கொடுத்தது மட்டும் தான் நான்...அத்தனை ஏற்பாடையும் பண்ணது சன்ஜய் தான் அவனுக்கும் தேங்க்ஸ் சொல்லு " என பானு கேட்டுக் கொள்ளவே
அவனைப் புன்முறுவலோடு நோக்கிய சத்யா "தேங்க் யூ" என்றாள்.
அவனோ புன்னகையால் பதில் சொல்லி விட்டு "சீக்கிரம் கேக் கட் பண்ணு...எல்லோரும் வெயிட்டிங் ல" என அவசரப்படுத்தினான்
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...