பகுதி - 1

5.5K 131 121
                                    

இனிமையானதொரு காலைப்பொழுது அது..பாடசாலை விடுமுறை நாள் ஆகையால் அந்த காலைப் பொழுது அமைதியாக விடிந்தது..வழமையாக விடியற்காலையிலேயே எழுந்து பழகியவனுக்கு எவ்வளவு தான் புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை
பெட்ஷீட்டால் தலை வரை போர்த்தி படுத்து இருந்தவன் மெதுவாக பெட்ஷீட்டை விலத்தி விட்டு எழுந்து அமர்ந்து கொண்டு தூக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

கண்களை கசக்கியவாறே "ஸ்கூலுக்கு போனா..தூக்கம் தூக்கமா வருது ஆனா வீட்டுல இருக்குற நாள் அதுவுமா தூக்கம் போகுதே இல்லையே என்ன சோதனையடா" என முனுமுனுத்தவன்

கட்டிலிலிருந்து கீழே இறங்கி ஜன்னல் அருகே போய் காற்று வரும் படியாக ஜன்னலை திறந்து விட்டான்

திறந்தவன் தன் பாட்டில் போக முற்பட்டிலும் "இன்னைக்கு வெளி உலகத்துல என்ன தான் நடக்குதுனு பார்ப்போம்" என்றவாறே ஜன்னல் வழியே எட்டி ஒரு பார்வை பார்த்தான். அவனுக்கு தெரியவில்லை இது அவன் வாழ்வில் அடுத்து நடக்கவிருக்கும் இனிமையானதும் துக்ககரமானதுமான நினைவுகளுக்கு அடித்தளமான பார்வை என்பது..

பார்த்தவன் விழிகள் இமைக்க மறுத்தது..
புத்தம் புதிதாக பூத்திருந்த ஒரு பூவை மணந்து பார்த்தபடி நின்றிருந்தாள் தேவதைபோலொருத்தி..பின்னர் தன் கையில் இருந்த கேமிராவை உயர்த்தி அதை படம்பிடித்தவள் சுற்றும் முற்றும் இருந்த அத்தனை அழகிய செடி கொடிகளையும் மலர்களையும் மரங்களையும் மாற்றி மாற்றி படம் பிடித்து இரசித்தாள்.

ஒரு மாலை இள வெயில் நேரம்
அழகான இலையுதிர் காலம் சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே என்ற பாட்டு அதிரனின் காதுகளில் ஒலிக்க தொடங்கியது..என்ன ஒரு வித்தியாசம்னா அது காலை நேரம்

அவள் செய்கையே அவள் வேறொரு ஊரிலிருந்து வந்திருப்பதை அவனுக்கு புலப்படுத்தியது..ஏனெனில் மரம் செடி கொடிகளை நேசிக்கிறாள் என்றால் கண்டிப்பாக சிட்டியிலிருந்து தான் வந்திருப்பாள் என அவன் ஊகித்து விட்டான்

காதலென்பது...Where stories live. Discover now