பகுதி - 30

351 55 12
                                    

பானு ஏற்கேனவே ஊகித்தது போலவே காலேஜில் சென்றதும் அவளால் சத்யாவிடம் சன்ஜய் விடயத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.

சரி காலேஜ் முடிந்து மீண்டும் செல்கையில் சொல்வோம் என காத்திருக்கலானாள்.

இப்படியாக காலேஜ் முடிந்து செல்கையில்
எப்படியாவது சத்யாவிடம் சொல்லியே ஆக வேண்டும் என கூற முற்பட்ட அந்த நேரம்

சரியாக காலேஜில் இவர்களுடன் படிக்கும் ஒரு மங்கை வந்து பானுவை சற்று அவளுடன் வருமாறு கேட்டுக் கொண்டாள்.

உள்ளுக்குள் சளித்தபடியே பானு "சத்யா நீ போகாத நான் வரும் வரை வெயிட் பண்ணு" என ஒன்றுக்கு இரண்டு தடவை சொல்லி விட்டு அவளோடு சென்றாள்.

சத்யாவும் " சரி " என சொன்னலும் அதை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை.

அவள் பானு வரும் வரை சற்று நேரம் காத்துக் கொண்டு இருக்கையில் அவளது போனிற்கு ஒரு அழைப்பு வந்தது.

அட்டண்ட் செய்தவள் மறு கணமே அவ்விடம் விட்டு நகர்ந்து காலேஜிலிருந்து வெளியேறி
கிளம்பிப் போய் விட்டாள்.

இங்கே ஒரு புறம் பானுவை அழைத்து வந்த பெண் "பானு உன்னை கொஞ்சம் ஸார் ஸ்டாப் ரூம் வரை வரச் சொன்னாரு" என சொல்லி விட்டு அவள் போய் விட

"எந்த ஸார்?
யாரு?
எதற்காக " என எதையுமே அவள் சொல்லவில்லை.

பானு எதுவும் புரியாமல் சரி என அவள் சொன்ன இடத்திற்கு போய் பார்க்க " அங்கே
ஏராளமானவர்கள் இருப்பாங்களே என்னை வர சொன்னது யாருனு எப்படி தெரிஞ்சிக்கிறது" என எண்ணியபடி போய் பார்க்கவே

அங்கே வழமைக்கு மாறாக கூட்டமே இருக்கவில்லை.

அவள் வாசல் வழியாக எட்டிப் பார்க்கவே உள்ளே ஹரிஷ் அமர்ந்திருந்ததைப் பார்த்து விட்டு அவளையறியாமலே பின்வாங்கினாள்.

ஆனால் அவள் வந்ததை அவர் பார்த்து விடவே "பானு கம் இன்" என்றார்.

பானுவிற்குள் கடுமையான பதற்றம் "எதற்காக அழைக்கிறார் ?" என யோசித்த படியே மெதுவாக உள்ளே நுழைந்து

காதலென்பது...Where stories live. Discover now