"சுபா ஏன்டி..மிஸ் உன்னை வெளிய அனுப்பிட்டாங்க" என எதுவும் புரியாதவளாக வினவினாள் அனு.
"அதுவா..என் கொப்பிய காணல்ல டி அதனால தான்"
"அதுக்கு வெளிய அனுப்பிடுவாங்களா..! அது சரி எங்க போச்சு உன் கொப்பி நீ வீட்ல இருந்து வரும் போது கொண்டு வரலயா.."
"அவங்க அப்படி தான்டி..காண்டாமிருகம்
கொண்டு வந்தேனேடி..ஆனாலும் காணல யாராச்சும் எடுத்திருப்பாங்களோனு தோணுது""சரி விடு தேடி பார்க்கலாம்..எனக்கு ரொம்ப பசிக்கிது..வா கேன்டீனுக்கு போகலாம்..எனக்கு எங்க இருக்குனு தெரியாது..ஸோ நீ தான் காமிக்கனும்"
"சரி எனக்கும் தான் பசிக்குது..ஆனாலும் அத விட ஒரு முக்கியமான வேலையும் இருக்கு கண்டிப்பா காண்டீன் போயே ஆகனும் வா போகலாம்"
"சரி மீராவையும் கூட்டிட்டு போவோம்..." என அனு சொல்லி விட்டு அவள் அமர்ந்து இருந்த பக்கம் திரும்பி "மீரா..நாங்க கேன்டீன் போறோம் வா போகலாம்" என அழைத்தாள்.
அவளோ தன்னை சுற்றி இருந்தவர்களிடம் ஏதோ கதை பேசிக் கொண்டு இருந்தாலும் கேன்டீன் என்ற வசனம் காதில் விழுந்ததுமே "இதோ வரேன்டி" எழுந்து வந்து விட்டாள்.
போகும் வழியில் "ஆமாம் சுபா இங்க கேன்டீன்ல புட்ஸ்லாம் எப்படி டேஸ்டியா இருக்குமா.." என வினவினாள் மீரா.
"ஆஹ் ஏதோ சாப்பிடுறா மாதிரி இருக்கும்டி..ரொம்ப சூப்பர்னுலாம் சொல்ல முடியாது" என சுபா சொல்லவுமே
"சாப்பிடுறா மாதிரி இருக்கும்ல அது போதும்.." என்றாள் அனு.
"ஏன் அனு நி வீட்டுல இருந்து புட்ஸ் கொண்டு வரலயா?" என சுபா கேட்க
"கொண்டு வந்திருக்கேன் அது அடுத்த ப்ரேக்கு இருக்கட்டுமேனு தான்..அத்தோட கேன்டீன நான் பார்த்ததும் இல்லைல அதான் போகலாம்னு" என்றாள் அனு.
இவர்கள் இப்படியாக கதைத்துக் கொண்டு போய் கேன்டீனை அடைய
அங்கே ஏற்கெனவே ஒருத்தன் வாங்கிய சாக்லேட்டுக்கு மூவரும் அடித்து பிடித்து சண்டை போட்டபடி நின்றிருந்தனர் அதியும் சந்துருவும் தர்ஷ்ஷூம்.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...