பகுதி - 5

710 85 32
                                    

அதி கதவை சாத்திய மறுகணமே தொப்பென்று கட்டிலில் குதித்தான்.

மறுகணமே "எத்தன தடவ தான்டா சொல்ரது விளயாடிட்டு வந்து அப்படியே கட்டில்ல விழாதனு" என சத்யா அடிக்கடி சொல்வது நியாபகம் வந்தவனுக்கு அக்கணத்தில் அவள் முகமும் அவன் கண் முன்னால் தோன்றி மறைந்தது.

அவனை அறியாமலேயே"சத்யா மிஸ்ஸிங் யூ பாட்லி டி.." என்றவன் கட்டிலில் கையை ஊன்றி எழுந்து அமர்ந்து கொண்டபடியே அருகில் தன்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த போனை எடுத்து கைக்குள் வைத்துக் கொண்டான்.

மறுகணமே வைப்ரேஷனை உணர்ந்தவன் திரையைப் பார்க்க "தர்ஷ்" என உச்சரித்தது அவன் இதழ்கள்.

"ஆமா இவன தவிற நமக்கு வேற யாரு போன் பண்ண போறாங்க" என எண்ணியவன்

"சொல்லுடா.." என்றான் போனை காதில் வைத்தபடியே

"மச்சான்...இதோ பாரு சரியா நாலு மணிக்கே க்ரவுண்டுக்கு வந்துருடா...லேட் பண்ணிட்டு இருக்காத ஐயா எப்பவும் சொன்னா சொன்ன டைம்க்கு வருவீங்கனு தெரியும் அதான் போன் பண்ணேன்"

"மச்சான்...நான் வரலடா"

"என்னது வரலயா..அது சரி என்னடா குரல் வேற ஒரு மாதிரி இருக்கு சொல்லுடா ஏதாவது பிரச்சினையா"

நம் குரலை வைத்தே மனநிலையை கணக்குப்போடும் உறவு கிடைப்பது என்னமோ வரம் என்று சொல்லுவார்கள்..அப்படி இருக்க அதிரனுக்கு கிடைத்திருக்கும் நட்பு வரம் தான் என்றால் மிகையாகாது

"அதெல்லாம் ஒன்னும் இல்லடா..லைட்டா தலை வலிக்குது அதான் "

"இல்லடா நீ இப்படி பேசுறவன் இல்லையே..அதுவும் இப்போ நீ வரலன்னா நம்ம பங்காளிங்க நாம பயந்து ஓடிட்டோம்னு சொல்லிகிட்டு திரிவானுங்கடா.."

"பரவாயில்லை விடு டா..இன்னோரு நாளைக்கு பார்த்துப்போம்"

"சரி அப்போ நீ வரலன்னா நம்ம பசங்களையும் போக வேணான்னு சொல்லிடுறேன்..நீ தலை வலின்னா ரெஸ்ட் எடுத்துக்கோ மச்சான்".. என்றவன் போனை கட் செய்தான்.

காதலென்பது...Where stories live. Discover now