பகுதி - 34

272 41 7
                                    

அவள் ஒரு வழியாக குளித்து முடித்து விட்டு தயாராகிக் கொண்டு வெளியில் வந்தாள்.

சன்ஜய்யோ அறையிற்கு வெளியில் இருந்தவொரு கதிரையில் அமர்ந்தவாறு போனில் யாருடனோ கதைத்துக் கொண்டு இருந்தான்.

இவள் வெளியில் போய் அவனைப் பார்க்கவே அவன் பிஸியாக இருப்பதைக் கண்டு விட்டு அவனை அழைப்பதை விரும்பாமல் எதிரில் போய் நின்றாள்.

பேசிக் கொண்டு இருந்தவன் எதேச்சையாக இவள் பக்கம் பார்வையைத் திருப்பவே
அந்த சிவப்பு நிற சேலையில் சிலையொப்ப அழகோடு தன் எதிரே நின்றிருந்தவளைப் பார்த்து பேச்சு வராமல் திக்கித் திணற

"நான் அப்றொமா பேசுறேன்" என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

"யார் சன்ஜய் போன்ல?" என அவள் உரிமையோடு கேட்கவும்

"ஆபிஸ் ல இருந்து போன் பண்ணிருக்காங்க ரெண்டு மூனு நாளா போகலைல அதான் எப்போ திரும்ப வரேன்னு கேட்க போன் பண்ணிருக்காங்க" என தாழ்மையாகப் பதிலளித்தான் அவனும்.

அவள் தலையசைத்து விட்டு சற்று தோய்ந்த முகத்தோடு நகர முற்படுகையில்

"என்னாச்சு டி என்ன பிரச்சினை ?" என்றான்.

"அதெல்லாம் ஒன்றுமில்லையே" என அவள் சிரித்து சமாளிக்க முற்பட்டாலும்

"என்கிட்டயே மறைக்க பார்க்குற பார்த்தியா?" என்றான் அவன் நக்கலாக

"ஆமாம் பிரச்சினை இருக்கு தான் அதுக்குனு என்ன பண்ண சொல்ர?" என பதிலளிக்க

"ஏன் டி டென்ஷன் ஆகுற... ஜஸ்ட் சொல்ரதுல என்ன இருக்கு உனக்கு ?" என்றான்.

"உன்னோட கல்யாணம் தான் சன்ஜய்" எனக்கு பிரச்சினை என்றாள் சட்டென

அவன் என்ன சொல்வானோ என பார்த்தவளுக்கு சிரிப்பு தான் பதிலாக கிடைத்தது.

"இதை பற்றி நானும் உங்கிட்ட பேசனும்னு தான் இருந்தேன்...இங்க சுற்றி ஆளுங்க இருக்காங்க வா வேற எங்கயாவது போய் பேசலாம்" என்றான்.

காதலென்பது...Where stories live. Discover now