மாலை நேரம் நான்கு மணியளவில் பானு வெளியே கிளம்ப தயாராகிக் கொண்டு இருந்தாள்.
சத்யா போய் கேட்க "எங்கு போகிறேன்" என சொல்லாமலேயே கிளம்பிப் போனாள் பானு.
அவள் கட்டாயப்படுத்திக் கேட்க முற்பட்டாலும்
பின்னர் அவளுக்கு வேண்டாம் என தோன்றவே
அமைதி காத்தாள்.சென்றவள் ஹரிஷ் சொன்ன இடத்திற்கு போய் நின்றிருக்க
ஒரு வெள்ளை நிறக் கார் அவளை நோக்கி வந்து நின்று ஹார்ன் அடித்தது.கறுப்பு நிறக் கண்ணாடியாகையால் எதுவும் புலப்படவில்லை"யாரு இது?" என சிந்தித்தவாறே அவள் பேசாமல் இருக்க
அடுத்த கணம் போன் அலறியது.
அட்டண்ட் செய்தவள் "ஸார் நீங்க சொன்ன இடத்துல தான் இருக்கேன்" என்றாள்.
"தெரியுது கார்ல வந்து ஏறுங்க" என அவன் சொன்னதும்
போய் கதவைத் திறந்தவாறு பின்னால் இருந்த ஸீட்டில் அமர்ந்த கொண்டவளை நோக்கிய ஹரிஷ்
"ஹார்ன் அடிச்சதும் வந்திருக்கலாமே?" என்றான்.
"யாருனு தெரியல அதான்" என அவள் சொல்ல
"சரி போவோமா?!" என்றான்.
சற்று தயங்கியவள் "if you don't mind எங்க போறதுனு தெரிஞ்சிக்கலாமா?!" என கேட்கவே
"ஸாரி நான் சொல்லலைல jewellery shopகு..." என அவன் சொல்ல
"ஸார்...என்ன சொல்ரீங்க jewellery shop இற்கா?" என அவள் சிரிக்க
"yeah" என்றான் சிம்பிளாக.
"அம்மாவுக்கு இல்லைனா sister கு birthday ah ?" என பானு கேட்கவும்
இல்லை என தலையசைத்தான்.
"அப்போ..." என பானு சொல்ல
"எனக்கு engagement அதுக்கு ஒரு Ring வாங்கனும் select பண்ண தான் உங்களை கூட்டிட்டு போறேன்" என அவன் சொன்னது தான் தாமதம்.
பானுவின் முகம் பொலிவிழந்து போனது , அவள் இதழில் தாங்கியிருந்த சிரிப்பு தோண்ட முடியாத ஆழத்தில் புதைந்து விட்டது.
VOUS LISEZ
காதலென்பது...
Roman d'amourகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...