இன்று நடந்த இந்த சம்பவம் சுபாவின் மனதில் ஆணி அடித்தது போல பதிந்தது.
அன்று தான் அவள் உண்மையிலேயே அவன் தன்னைக் காதலியாக பார்க்க விரும்பவில்லை என்பதை முழுமையான உணர்ந்தாள் எனலாம்.
அன்றிலிருந்து அவள் இனிமேல் அதிரனைத் தொந்தரவு செய்யக் கூடாது என்ற முடிவை எடுத்தாள்.
மற்றொரு புறத்தில் வீட்டுக்கு போய் சேர்ந்தனர் சத்யாவும் சன்ஜய்யும்.
போய்க் கதவைத் தட்ட
சிறிது நேர இடைவெளியின் பின்னர் பானு வந்து கதவைத் திறந்தாள்.ஆனால் இவர்கள் இருவரது முகத்தைக் கூட பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு மறுகணமே உள்ளே நுழைந்தாள் பானு.
இதைப் பார்த்து விட்டு சன்ஜய்யை நோக்கி ஒரு சோகம் கலந்த சிரிப்பை உதிர்த்தவாறே "பானு இங்க தான் இருக்களா?!" என வியந்தாள் சத்யா.
"ஆமாம் நானும் கோபத்துல போய் இருப்பானு நினைத்தேன்...பட் இங்க தான் இன்னும் இருக்கா" என்றான் அவனும் அதே சந்தோசத்தோடு
இவர்கள் உள்ளே போய் சிறிது நேரம் கடந்த பின்னர் "சத்யா போய் அவக்கிட்ட பேசி சமாதானம் பண்ணு" என்றான் சன்ஜய்.
இவள் அதற்கிணங்கி எழுந்து போக முற்படுகையில் அறையிலிருந்து வெளியில் வந்தவள் நேராக கிட்சனிற்குள் நுழைந்தாள்.
சத்யா சற்று தயங்கியவாறே அவளைத் தொடர்ந்து போக முற்படுகையில் அவளது கையைப் பிடித்து தடுத்து அமரும் படி சைகை செய்தான் சன்ஜய்.
"ஏன் டா?" என்றவாறே அமர்ந்தாள் அவளும்.
"அவ என்ன பண்ரான்னு பார்க்கலாம் கொஞ்சம் பொறுமையா இரு" என்று பதில் சொன்னான் அவன்.
இவர்கள் சிறிது நேரம் அமர்ந்திருக்க கையில் காபியோடு வந்தவள் இருவர் கையிலும் கொடுத்து விட்டு
எதுவும் பேசாமல் மீண்டும் போக முற்படுகையில் "பானு" என்று தடுத்தாள் சத்யா.
முகத்தை சுளித்தவாறே திரும்பி இவளை நோக்கியவள் "என்ன?" என்றாள்.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...