பகுதி - 36

346 30 6
                                    

அனு வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் கழிந்திருக்கும் என்ற நிலையில் அன்று தான் துணிகளை போட்டுக் கொண்டு வந்த பெட்டியை திறந்தாள்...
அவற்றை எடுத்து கபோர்டில் வைக்கும் நோக்கத்தோடு...

ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டு இருக்கையில்
ஒரு பொருளைப் பார்த்ததும் அவள் மிரண்டு போய் விட்டாள்.

ஆம் .அது அதிரனைப் பார்த்த முதலாம் நாள் உடைந்த அந்த கேமிரா.
ஆனால் அது இப்பொழுது உடைந்ததாக இருக்கவில்லை அது சரி செய்யப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்ததும் அவள் நினைவிற்கு வந்தது அதிரன் தான்.

அவன் தான் அதை சரிசெய்து வைத்திருப்பான் என எண்ணி சிரித்துக் கொண்டவளுக்கு
உள்ளுக்குள் இலேசாக வருத்தம்.

அது அவனைப் பிரிந்து வந்ததனாலா? என அவளுக்கு தெரியவில்லை.

அதன் பின்னர் அதனை எடுத்து கபோர்ட்டில் பத்திரமாக வைத்தவள்

அவனுடன் இருந்த அத்தனை நாட்களையும் நினைத்துப் பார்த்தாள்.

அந்த அழகான சண்டைகள் , சிறிய குறும்புகள் என பல அருமையான தருணங்கள் அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

அப்பொழுது முதல் ஒவ்வொரு நொடியும் அவனை மிஸ் பண்ண ஆரம்பித்தாள் அவள்.

இந்த நேரம் பார்த்து மீரா அவளது அறைக்குள் வந்தாள்.

ஆனால் அவள் வந்தது கூட தெரியாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தாள் அனு.

அவளது துணி கொண்டு வந்த பெட்டி அப்படியே திறந்தவாறு இருக்க
அவள் அதனருகே அமர்ந்தவாறு யோசனையில் ஆழ்ந்திருந்தவளைப் பார்த்த மீரா

அதனையும் மிஞ்சி தன்னை ஈர்த்த விடயத்தால் அவளது துணிப் பெட்டியின் அருகே சென்று அந்த கறுப்பு நிற சுடிதாரை கையில் எடுத்துப் பார்த்தாள்.

வழமையாகவே மீராவிற்கும் அனுவிற்கும் கறுப்பு நிறத்தின் மேல் தீராத காதல் உண்டு.

"ஏய் அனு இது சூப்பரா இருக்கு டி? எனக்கு தெரியாம எப்போ வாங்குன?" என்றாள் அனுவை நோக்கி

காதலென்பது...Where stories live. Discover now