அனு செல்வதற்கென தயாராகி வந்து நின்ற அந்த நேரம்
பட்டுப் புடவையோடும் காதில் கழுத்தில் கைகளில் ஆபரணங்களோடும் நெற்றியில் குங்குமம் அனைத்திற்கும் மேலாக கழுத்தில் மஞ்சள் கயிரோடு மணப்பெண் கோலத்தில் வாசலில் வந்து நின்றாள் சத்யா.
அவளைப் பார்த்த அனு உடனேயே "அக்கா...என்னக்கா இது" என கைகளால் வாயைப் பொத்திக் கொள்ள
அவள் அழைத்த சத்தத்தில் தேவியும் கூட அவ்விடம் ஓடி வந்தார்.
அதிரனோ எதுவும் பேசமுடியால் அனுவை நோக்கினான்.
அனைவரும் அதிர்ச்சி வெள்ளத்தில் மிதக்க தேவிக்கோ தனக்கென இருந்த ஒற்றை மகள் செய்து இருக்கும் காரியத்தால் உயிரே போய்விட்டது போல இருந்தது.
அவளருகே சென்ற தேவி "என்னடி கோலம் இது...என்ன பண்ணி வச்சிருக்க நீ..." என கேட்டவாறே அவள் தோள்களில் கை வைத்துக் குலுக்கினார்.
அவள் பதில் சொல்லும் முன்னரே
அவளது வாயால் அந்த வார்த்தைகளை கேட்க முடியாதது வெளிப்படுமாறு தலை சுற்றி கீழே விழுந்து விட்டார் தேவி.சுற்றியிருந்த அனைவரும் அவரருகே ஓடிச் செல்ல
அனுவின் மடியில் வீழ்ந்தார் தேவி.சத்யாவும் கதறத் தான் செய்தாள்.
எத்தனையோ தடவைகள் நீர் தெளித்துப் பார்த்தும் கண் விளித்துப் பார்க்க முடியவில்லை தேவியால்
வைத்தியசாலைக்கு அழைத்துக் கொண்டு போக
இரண்டு நாட்கள் மாரடைப்பு என தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டார் தேவி.
இதற்கிடையில் எண்ணற்ற சம்பவங்கள் நடந்தேறிற்று...
தான் முற்று முழுதாக நம்பியிருந்த அக்கா செய்த வேலையால் மிஞ்சிய ஏமாற்றத்தின் குரலாக
சத்யாவை வார்த்தைகளாலே கொன்று விட்டான் அதிரன்.பெற்ற தந்தையே அவளை தன் பிள்ளை இல்லை என உரைத்து விட
இந்த நிலையில் அவள் உள்ளம் மலையை விட கனத்துப் போயிற்று.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...