ஐந்து வருடங்களுக்குப் பிறகு...
அமைதியான ஒரு பாதை...
அதில் சிறுத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தது ஒரு கார்...
வெளியில் இருந்த அமைதி காரின் உள்ளேயும் இருக்க தான் செய்தது.
அந்த அமைதியைக் கலைக்கும்படியாக ஒலித்தது அவனது கைப்பேசிபோனின் திரையை நோக்கி பார்வையை செலுத்தியவன் எடுத்துப் பேசாமல்
ட்ரைவிங்கிலேயே முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டு இருந்தான்.மீண்டும் மீண்டும் அது விடாமல் அலற
அட்டண்ட் செய்தவன் "சத்யா நான் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கேன்...அப்றொமா கால் பண்ரேன்" என்றான்."அதி...அது இல்லை டா நீ எப்போ ஊருக்கு வரன்னு சுபாவோட அப்பா கேட்டுட்டே இருக்காரு டா...நீ வேற இன்னும் ஒரு மாசத்துல வரேன்...இரண்டு மாசத்துல வரேன்னு சொல்லிட்டே இருக்க..நான் என்ன தான் பண்ரது சொல்லு...அவங்களுக்கு இருக்குறது ஒரே பொண்ணு இல்லையா...அதான் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசைப்படுறாங்க போல...இப்போ கூட போன் பண்ணினாரு..." என அடுத்த முனையில் சத்யா சொல்லிக் கொண்டு போக
"அக்கா...அப்றொமா போன் பண்ரேன்" என சற்று அழுத்தமாக சொல்லி விட்டு போனைக் கட் செய்கையில்
எதிரில் சென்ற வாகத்தில் இலேசாக மோதி விட்டான்.
அவன் பிரச்சினை பண்ணும் நோக்கத்திலேயே வண்டியை செலுத்தினானோ என்னமோ அதிரனை பாடாய்ப் படுத்தி விட்டான்.
தவறு அவன் மேல் தான் இருந்தாலும் பிரச்சினையை முடிக்க வேண்டும் என்பதற்காக அதிரன் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து விட்டு கிளம்பிப் போனான்.
வீட்டுக்கு சென்றதும் மறுபடியும் அழைப்பு
இந்த தடவை தர்ஷன் என்பதால்
உடனே பேசியவன் "என்னடா அதிசயமா போன்லாம் பண்ர?" என்றான்."அதி விளையாடாத டா...அப்றொம் டென்ஷன் ஆகிருவேன்...நேற்று கூட போன் பண்ணேன்...நீ தான் பிஸி...மீட்டிங்...அது இதுனு சொல்லி கட் பண்ணுன...வெளிநாட்டுக்கு போனதுல இருந்து எங்கள சுத்தமா மறந்துட்ட" என தர்ஷ் சொல்ல
ESTÁS LEYENDO
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...