பகுதி - 17

345 67 56
                                    

சூரியன் உறங்கச் செல்லும் அழகிய மாலைப்பொழுது உதிக்கவே தான் வந்து சேர்ந்திருக்கும் புதிய இடத்தில் இருக்கும் புதிய விடயங்களை ஆராயும் முயற்சியில் இறங்கியிருந்தாள் அனு.

முதல் வேலையாக அதிரனின் வீட்டை ஒரு இடம் விடாமல் முழுமையாக சுற்றிப் பார்த்தாள்.
பார்த்ததில் அந்த வீட்டில் நான்கு அறைகள் இருப்பது அவள் கண்டுபிடித்த முதல் விடயமாக இருந்தது.

இப்படியாக அவள் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருக்கையில் சடாரென ஒரு சத்தம்...

உடனடியாக ஒலியைத் துரத்தி ஓடியவள் போய் பார்க்க அங்கே கீழ் மாடிக்கு செல்லும் ஜன்னலுக்கு கீழே விழுந்து நிலத்தில் தொப்பென பல்லி போல ஒட்டிக் கொண்டு இருந்தது ஒரு ஜீவன்.

வாயைப் பிளந்த படியே மெதுவாக காலை இழுத்து நடந்து அதனருகே சென்றவள் "ஏய் சுபா லூசாடி உனக்கு..வீட்டுக்குள்ள வர வேணும்னா வாசலால வர வேண்டியது தானே..என்னமோ திருடன் போல ஜன்னலால குதிச்சு வர..என்ன டி இது புது விளையாட்டு இன்னும் கொஞ்சம் மிஸ் ஆகி இருந்துச்சுனா படி வழியா உருண்டை மாதிரி உருண்டுட்டு போய் இருக்க வேண்டியது தான்..அப்றொம் உன் எலும்பை தான் எண்ணி இருக்கனும்" என சொல்லவே

"ஆமா உனக்கு ஆசை தான்..முதல்ல தூக்கி விடு டி" என முனுமுனுத்தாள் சுபா.

"சரி..சரி..இரு உடனே கோபப்படாத" என தனது கையை நீட்டி எழுந்துகொள்ள முயற்சித்தவளுக்கு உதவினாள் அனு.

"அது சரி அனு...ஸ்கூல்ல இருந்து வந்தியே இப்போ கால் எப்படி இருக்கு...ஒன்னும் பிரச்சினை இல்லைல"

"இல்லை டி அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆண்டி டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் மருந்து எல்லாம் போட்டு விட்டாங்க..ஸோ இப்போ ஐ அம் நாட் ஹாவிங் அ ப்ராப்லம்"

"ப்பாஹ்...இப்போ தான் டி நிம்மதியா இருக்கு..ஸ்கூல்ல மீரா அனு என்ன பண்ராளோ ? எப்படி இருக்காளோ? எங்க இருக்காளோனு? மூச்சுக்கு மூவாயிரம் தடாவை கேட்டு கேட்டு என்னையும் பயமுறுத்தி விட்டுட்டா.."

காதலென்பது...Where stories live. Discover now