பகுதி - 19

374 67 30
                                    

அடுத்த நாள் இனிதே புலர்ந்தாலும் அது பயங்கரமாக பிஸியான ஒரு நாளாகவே இருந்தது.

அன்று வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்து இருந்ததால் தேவியும் ரத்னவேலும் வேலைக்கு கூட செல்லவில்லை.

சத்யாவோ பொழுது புலர்ந்ததுமே எழுந்து வேலைகளை ஆரம்பித்து விட்டாள்.

அனுவும் சத்யாவுடன் சேர்ந்தே எழுந்து வீட்டை அலங்கரிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் ஒவ்வொரு வேலைகளில் மும்முரமாக இருந்தாலும் முக்கியமான நபர் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல தன் பாட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

சத்யா நேற்று வாங்கி வந்த கேக்கிற்கு அழகு சேர்க்கும் முகமாக மேலும் சில அலங்காரங்களை அதன் மேல் வரைந்தவாறே அதில் "ஹாப்பி பர்த்டே அதிரன் " என எழுதுகையில் தான் அவனை காலையில் இருந்தே காணவில்லையே என்பது அவளுக்கு தோன்றியது.

செய்து கொண்டு இருந்த வேலையை அப்படியே போட்டபடி போட்டு விட்டு "இந்த எருமை இன்னுமா எந்திரிக்கல..கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை..அவனோட பர்த்டேக்கு நாங்க எல்லோரும் இங்க கஷ்டப்பட்டு ஒவ்வொரு வேலை பண்ணிட்டு இருக்கோம்..இவன் ஜாலியா தூங்குறானா..விடக் கூடாது" என உள்ளுக்குள் புலம்பியவாறே அவனது அறையை நோக்கி நடை போட்டாள்.

இவள் சென்று அறையின் கதவை தட்டுவதற்காக கை வைக்க முன்னரே கதவு திறக்கப்பட்டது.

எதிரில் அதி கழுத்தில் டவலோடு நின்று இவளை ஒரு பார்வை பார்த்தவாறே "என்ன காலையிலேயே ஆசிர்வாதம் பண்ணலாம்னு வந்தியோ...அதெல்லாம் நான் எழுந்தாச்சு..குளிச்சிட்டு வரேன் கிளம்பு" என்று விட்டு கதவை சடாரென சாத்தினான்.

"இவன் கதவை மூடுனது நம்மளுக்கு அப்படியே கன்னத்துல அறைந்த மாதிரியே இருந்துச்சுல" என நின்ற இடத்திலேயே நின்று சத்யா யோசித்தாலும் "ச்ச..அப்டிலாம் இல்லை " என அவளே மனதை தேற்றிக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

காதலென்பது...Where stories live. Discover now