பகுதி - 2

1.8K 101 47
                                    

ஆனால் அவள் வரவில்லை
அதி அழைத்ததும் மறுகணமே சத்யா வந்தால் தான் அதிசயம்..

"என்ன டி அக்கா இப்படி பண்ணிட்டியேடி..இந்த பொண்ணு முன்னாடி என்னய இந்த கோலத்துல நிற்க வச்சிட்டியே..என்னய பற்றி என்ன நினைப்பாளோ..ஒரு வேலை வேலைக்காரான் இல்லனா சமயற்காரன் அதுவும் இல்லனா தோட்டக்காரன்னு நினச்சிருவாளோ" என்ற எண்ண அலைகளுக்கு மத்தியில்

முகத்தை விறைப்பாக வைத்து சமாளித்தவன் "யாரு நீங்க?" என்றான்.

அதற்கு அவள் "சத்யா அக்கா இருக்காங்களா?" என கேட்க எதுவும் பேசாமல் தலையசைத்தவன்
"உள்ள வாங்க" என்றான்.

அவள் மெதுவாக உள்ளே வர சத்யாவை பார்த்து முறைத்தவாறே "இப்படி பண்ணிட்டியேடி..!!"என்றான் பார்வையாலே..

அவளோ ஒரு நக்கல் சிரிப்பை முகத்தில் ஏந்தியபடி நின்றிருந்தாள்.

உடனடியாக தன் அறையை நோக்கி விரைந்தவன் "இருடி வரேன்" என உள்ளுக்குள் பதித்தவாறே ரெடியாக ஆரம்பித்தான்.

"ஹாய் அக்கா.." என்றவாறே அவளை நோக்கி ஒரு சிரிப்பை உதிர்த்த மீரா.

அவள் அருகே போய் அமர்ந்து கொள்ள "ஹாய் மீரா..என்ன அதிசயமா வீட்டுக்கு வந்திருக்க" என்றாள் சத்யா.

"அது ஒன்னுமில்லக்கா..புது இடம் இல்லயா வீட்டுக்குள்ளயே இருக்க போர் அடிக்கிது..இங்க எனக்கு தெரிஞ்சது உங்கள மட்டும் தான் அது தான் வந்தேன்" என்றாள் மீரா.

"அது ஒன்னும் பிரச்சினை இல்ல நீ எப்போ வேணாலும் வீட்டுக்கு வரலாம் மீரா.." என்ற சத்யா

"ஏன்டி உனக்கு என்ன போர் அடிக்கிது..அதான் உன்ன போலவே இன்னொருத்தி உன் கூடவே இருக்காளே..ஐ மீண் உன்னோட ட்வின் சிஸ்டர்" என மேலும் வினவினாள்.

"ஐயோ அவள விடுக்கா அவளுக்கு எப்போ பாரு வீட்டுல இருக்க முடியாது..கையில கேமிராவ தூக்கிக்கிட்டு அவ பாட்டுக்கு எங்கயாச்சும் போய்டுவா..எவ்வளவு முயற்சி பண்ணாலும் அவள தேடுறது கஷ்டம் தான் அவளா வந்தா தான் எங்க போனனு கேட்டு தெரிஞ்சிக்கனும் இப்போ எங்க போய் இருக்காளோ" என உதட்டை சுளித்துக் கொண்டாள் மீரா.

காதலென்பது...Where stories live. Discover now