பகுதி - 16

404 70 21
                                    

அனுவிற்கு அதிரனின் வீடு தான் இனி தங்குமிடமாகப் போகிறது.
அவளுக்கு இதில் பெரிதளவு விருப்பம் இல்லையென்றாலும் தேவியின் பாசத்தால் அவரது பேச்சை அனுவினால் நிராகரிக்க முடியவில்லை.

அனுவும் தேவியும் சோபாவில் அமர்ந்தவாறு பேசிக் கொண்டு இருந்த அந்த நேரம் பார்த்து வீட்டின் காலிங் பெல் கணீரென ஒலித்தது.

சட்டென பேச்சை நிறுத்தி விட்டு மொளனமாகிய தேவி "அனு இருமா நான் யாருனு பார்த்துட்டு வரேன்.." எழுந்து செல்ல

அனுவும் சரி என தலையசைத்தாள்.

"யாராக இருக்கும்..!அதுவும் இந்த நேரத்தில்.." என யோசித்தவாறே கதவை நோக்கி நடை போட்ட தேவி மெதுவாக கதவை திறந்து நோக்க

அங்கே தன்னை சுற்றி ஏறத்தாள நான்கைந்து பைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு கதவை திறக்கும் வரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.

சத்யாவைப் பார்த்ததும் "ஏய் சத்யா..எப்படி டி இருக்க..என்ன டி சொல்லிக்காமலேயே வந்துட்ட..வர்ரதா ஒரு போன் கூட பண்ணலயே" என தேவி கேட்டாலும் எதற்குமே பதில் சொல்லாதவள்

"அம்மா எல்லா திங்க்ஸ்ஸையும் எடுத்து உள்ள வையேன் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.." என்றவாறே உள்ளே வந்து தொப்பென சோபாவிற்கு தன் பாரத்தை செலுத்தினாள்.

அமர்ந்தவள் எதிரே அனு அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு "ஹேய் ...அனு நீ என்ன இங்க?" என கேட்கவும்

அனு பதில் சொல்ல முன்னரே குறுக்கிட்ட தேவி "இனிமேல் அனு இங்க தான் இருக்க போறா.." என்றார்.

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சத்யா "நிஜமாவா?" என கேட்டவாறே போய் அவள் அருகில் அமர்ந்து கொள்ள

"ஆமாம் அக்கா...ஆண்டீ இங்க இருக்க சொன்னதும் என்னால மறுக்க முடியல.." என்றாள் அனு.

"எதுக்கு முடியாதுனு சொல்லனும்...உன்னோட நல்ல நேரம் நானும் வீட்டுக்கு வந்துட்டேன்..இல்லைனா உனக்கு போர் அடிச்சிருக்கும்ல.." என்று விட்டு தேவியை நோக்கிய சத்யா

காதலென்பது...Where stories live. Discover now