அதனைத் தொடர்ந்து ஒரு நாள் காலையில் சத்யா காலேஜிற்கு போக தயாராகிக் கொண்டு வந்து பார்க்கையில் அறையில் பானுவைக் காணவில்லை.
"வழமையா விட்டுட்டு போயிருவேன் போயிருவேன்னு சொல்ரது பக்கி செஞ்சி காட்டிருச்சா...ஐயோ இப்போ தனியா தான் போகனுமா?" என புலம்பிக் கொண்டு வெளியேற முற்படுகையில் ஒரு பைக் வந்து நிற்கும் ஓசை இவளது காதுகளை வந்தடைய
அது சன்ஜய்யின் பைக் ஓசை தான் என அறிந்து கொள்வதற்கு அவளுக்கு சில வினாடிகளிலேயே முடிந்தது.
கதவைத் திறந்து கொண்டு வெளியே போய் பார்க்கவே
பைக்கில் அமர்ந்திருந்தவன் கலைந்திருந்த முடிகளை சரி செய்தவாறு இருக்க
இவளது வருகையைப் பார்த்ததும் நிறுத்தி விட்டு சிரித்தான்.
பதிலுக்கு சிரிக்காமல் "என்ன வழமையா போன் பண்ணி வர சொன்னாளே வர மாட்ட இன்டைக்கு என்ன அதிசயமா இந்த பக்கம் வந்திருக்க" என்றாள் சத்யா உம்மென்ற முகத்தோடு
"பானு இன்னைக்கு உனக்கு பணிஷ்மன்ட் கொடுத்துட்டாளாமே" என்றான் பதிலுக்கு நக்கலாக
முகத்தை இறுக்கியவாறே "உனக்கு எப்படி..." என சத்யா சொல்ல வந்ததை சொல்லி முடிக்க முன்னர்
"பானு தான் போன் பண்ணி நீ தனியா வர பயப்படுவன்னு காலேஜ்ல கொண்டு வந்து விட சொன்னா" என முடித்தான் அவன்.
இதைக் கேட்டதும் பானுவிற்கு தன் மேல் இருக்கும் பாசத்தை எண்ணி உள்ளுக்குள் அவள் சிரித்தாலும்
வெளியில் காட்டிக் கொள்ளாமல் "போகலாம்" என்றாள்.
"என்ன போகலாம்? " என காற்புள்ளி இட்டு தொடங்கியவன்
"பைக்ல உன்னை கூட்டிட்டு போனா பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க...அதனால உன்னை ஒரு ஆட்டோல ஏற்றி விட்டுட்டு பக்கத்துல நான் பைக்ல வரேன்" என முடிக்கவே
இதைக் கேட்டு விட்டு சத்யா தரையைப் பார்த்த படி பேசாமல் இருக்கவுமே "சரியா?" என்றான் அழுத்தமாக மீண்டும் ஒரு முறை
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...