சத்யாவை ஒரு வழியாக சமாதானப்படுத்திய அனு அவளிடம் என்ன விடயம் என்பதை கேட்க
அவள் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்கினாள்.
____________________________________________
அது ஒரு அமைதியான மாலைப் பொழுது..
அன்று பானுமதி எவ்வளவோ வேண்டாம் என சொன்னாலும் அதைக் கேளாமல் சத்யா அவள் உறங்கும் நேரம் பார்த்து மெதுவாக அறையை விட்டு வெளியேறிச் சென்றாள்.பானுவிற்கு அன்று கடுமையான காய்ச்சல்..
இவர்கள் ஊரிற்கு புதுசு என்பதால் மெடிகல் ஷாப்கள் இருக்கும் இடமோ அல்லது வைத்தியசாலைகள் இருக்கும் இடமோ இவர்களுக்கு தெரியவில்லை.ஆனால் பானுவின் நிலைமை வர வர மோசமாகிக் கொண்டு போனதால் மருந்து வாங்கி தர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள் சத்யா.
அதனாலேயே பானுவின் பேச்சை மீறி வெளியேறிச் செல்ல வேண்டி ஏற்பட்டது.
பானு விளித்துக் கொள்வதற்குள் போய் வந்தாக வேண்டும் என்பதற்காக சத்யா பதற்றத்தோடு வெளியேறியமையால் அவள் தன்னுடைய கைப்பேசியை எடுத்துக் கொண்டு போக தவறி விட்டாள்.
வெளியேறியவள் ஏதாவது ஒரு மெடிக்கல் ஷாப் கண்ணிற்கு தென்படாதா என தன்னையறியாமலேயே வெகு தூரம் நடந்து வந்து விட
அங்கே ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார் யாசகம் செய்யும் ஒரு முதியவர்.
அவரருகே சென்றவள் அவருக்கு காசு கொடுத்து விட்டு
"தாத்தா...இங்க மருந்து வாங்குறதுக்கு பக்கத்துல ஏதாவது கடைகள் இருக்கா.." என கேட்கவேஅவரும் ஆமாம் இருக்குமா...என வழி காட்டிக் கொடுக்க
இவளும் நன்றி சொல்லி விட்டு அவர் சொன்ன பாதை வழியே நடக்க ஆரம்பித்தாள்.
சென்றவள் அவர் சொன்ன இடத்தில் மெடிக்கல் ஷாப் இருக்கவே
கடும் சந்தோசத்தோடு மருந்தை வாங்கிக் கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
YOU ARE READING
காதலென்பது...
Romanceகரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...